சேனைக்கிழங்கு கோலா உருண்டை (Senaikilanku kola urundai recipe in tamil)

மீனா அபி
மீனா அபி @cook_21972813

சேனைக்கிழங்கு கோலா உருண்டை (Senaikilanku kola urundai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 200 கிராம். சேனைக்கிழங்கு
  2. 10. சின்ன வெங்காயம்
  3. 2. பச்சைமிளகாய்
  4. 1/2 துண்டு. இஞ்சி
  5. 5 பல். பூண்டு
  6. 1 டீஸ்பூன் சீரகம்
  7. 1 டீஸ்பூன் சோம்பு
  8. 1 டீஸ்பூன் கசகசா
  9. கறிவேப்பிலை
  10. கொத்துமல்லி
  11. புதினா
  12. 1 துண்டு. பட்டை
  13. 2. கிராம்பு
  14. 1 ஏலக்காய்
  15. 3 டீஸ்பூன். துருவிய தேங்காய்
  16. 4டீஸ்பூன். பொரிகடலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சேனைக்கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீரில் வேகவைக்கவும். வேகவைக்கும் பொழுது சிறு துண்டு புளி சேர்த்து வேக வைத்தால் அது அரிக்காமல் இருக்கும். முக்கால் பதம் வெந்தவுடன் எடுக்கவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், தேங்காய், பொரிகடலை, பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு,சீரகம் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

  3. 3

    வேகவைத்த சேனைக் கிழங்கை நன்றாக மசித்துக்கொள்ளவும்.

  4. 4

    மசித்த சேனைக்கிழங்கு உடன் அரைத்து வைத்த பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  5. 5

    பொரிக்க தேவையான எண்ணெயை சூடு படுத்தவும் செய்து வைத்த கலவையிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் நன்றாக இரண்டு புறமும் பொரித்து எடுக்கவும்.

  6. 6

    சுவையான மற்றும் சத்தான சேனைக்கிழங்கு கோலா உருண்டை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
மீனா அபி
மீனா அபி @cook_21972813
அன்று

Similar Recipes