எக் பப்ஸ் (Egg buffs recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பத்தரத்தில் மைதா, உப்பு,தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்
- 2
125கிராம் வெண்ணெய் ஐ 3பாகமாக பிரித்து வைக்கவும்
- 3
அதனை 2பாகமாக பிரித்து மாவு மேஜைமீது தூவி உருட்டவும் அதன்மீது சிறிது வெண்ணை தடவவும் பின் அதன்மீது சிறிது மாவு தூவவும் பின் மற்றொரு விரித்த ஷீட்டை வைக்கவும்
- 4
பின் அதனை இரு புறத்திலிருந்தும் மடிக்கவும் அதன்மீது மீண்டும் வெண்ணை தேய்த்து மற்றும் மாவு தூவி மீண்டும் ஏறுபுறத்திலிருந்தும் மடிக்கவும்
- 5
அதனை 1 மணிநேரம் பிரிட்ஜ்ல் வைக்கவும்
- 6
பின் அதனை மீண்டும் உருட்டவும் அதன்மீது வெண்ணை தேய்த்து மாவு தூவி மடிக்கவும் முதலில் செய்ததுபோல மீண்டும் செய்து பிரிட்ஜ்ல் 1 மணிநேரம் வைத்து எடுத்து 3 ஆவது முறை திரும்பவும் மடித்து பிரிட்ஜ்ல் 1 மணிநேரம் வைத்து எடுக்கவும்
- 7
அதனை தேய்த்து 6 முதல் 8 பாகமாக பிரித்து வைக்கவும்
- 8
மசாலா செய்ய :- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்
- 9
அத்துடன் மிளகு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் மசாலாவோடு சேர்ந்து வெந்ததும் அடுப்பை அணைக்கவும்
- 10
முட்டையை 2 துண்டாக வெட்டி வைக்கவும்
- 11
விரித்து 6 பாகமாக வெட்டிவைத்திருக்கும் ஷீட்டில் மசாலா மற்றும் முட்டை வைத்து 4 பகுதியிலிருந்தும் நடுவில் கொண்டுவந்து அழுத்தம் கொடுக்கவும் அதன்மீது ஒரு பிரஷ் வைத்து பால் தடவவும்
- 12
இப்பொழுது அதனை 200டிகிரி செல்சியஸ்யில் 10நிமிடம் ப்ரீ ஹீட் செய்த ஓவெனில் 20-22 நிமிடம் பேக் செய்து எடுக்கவும் சுவையான எக் பப்ஸ் ரெடி
- 13
குறிப்பு :- 1) வெண்ணெய் 3 மணிநேரத்துக்கு முன் எடுத்து வைக்கவும் பட்டர் அறை வெப்பநிலையில் இருந்தால்தான் மாவில் தடவ எளிதாக இருக்கும் 2)மாவை ரொம்ப அழுத்தி விரிக்கக்கூடாது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
-
கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil)
சென்னையில் ஒரு பிரபல உணவகத்தில் மொறுமொறு ஃபிஷ் பிங்க்கர் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கொரோனா சமயத்தில் உணவகங்கள் மூடி இருந்ததனால் நான் இந்த ஃபிஷ் பிங்க்கர் ருசிக்க பல நாள் காத்திருக்க வேண்டி இருந்தது. அப்பொழுதுதான் இந்த ரெசிபியில் இருக்கும் ஃபிஷ் பதிலாக முட்டை வைத்து செய்து பார்த்தேன். இந்த அசத்தலான ரெசிபியை கீழே காணவும். #worldeggchallenge Sakarasaathamum_vadakarium -
எக் பஃப்ஸ்(egg puffs recipe in tamil)
#wt3எக் பஃப்ஸ் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தது.பஃப் பேஸ்ட்ரி வீட்டிலேயே செய்தேன். பஃப்ஸ் சுவை சூப்பராக இருந்தது. punitha ravikumar -
-
-
-
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)
#worldeggchallenge Renukabala -
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
-
-
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G
More Recipes
கமெண்ட் (2)