உருளைக்கிழங்கு கறிவேப்பிலை மசாலாவருவல்(Potato Curryleaves Roast recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#GA4
#ga4 #week1
Potato
மிகவும் சுவையான இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து பாருங்கள்.

உருளைக்கிழங்கு கறிவேப்பிலை மசாலாவருவல்(Potato Curryleaves Roast recipe in tamil)

#GA4
#ga4 #week1
Potato
மிகவும் சுவையான இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  1. 250 கிராம் உருளைக்கிழங்கு
  2. எண்ணெய் தேவையான அளவு,
  3. கடுகு,
  4. உளுந்து,
  5. 1 டேபிள்ஸ்பூன்,மிளகாய்த்தூள்
  6. உப்பு தேவையான அளவு,
  7. அரைக்க:
  8. கறிவேப்பிலை ஒரு கைப்பிடி,
  9. 1 டேபிள்ஸ்பூன்,சோம்பு
  10. 8 பல்,பூண்டு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை நீலமாக நறுக்கி வைக்கவும்.

  2. 2

    வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய உருளைக்கிழங்குகளை அரை பதத்திற்கு வறுத்து எடுக்கவும்.

  3. 3

    மசாலாவிற்க்கு கறிவேப்பிலை, சோம்பு, பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.

  4. 4

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்..

  5. 5

    மசாலா நன்றாக வதங்கியதும், வறுத்து வைத்துள்ள கிழங்குகளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

  6. 6

    பிறகு தோசை கல்லில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு இந்த கலவையை வைத்து நன்றாக முறுகலாகும் வரை இருபுறமும் திருப்பி வேகவிடவும். இப்படி செய்தால் மசாலா கிழங்குடன் நன்றாக சார்ந்த ருசியாக இருக்கும்.

  7. 7

    பொன்னிறமாக முறுகலான உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes