எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15mins
1 பரிமாறுவது
  1. 7சிறிய சப்போட்டா பழம்
  2. 2கப் பால்
  3. 2டீஸ்பூன் சர்க்கரை
  4. 1கப் வெண்ணிலா ஐஸ்க்ரீம்

சமையல் குறிப்புகள்

15mins
  1. 1

    ஏழு சிறிய சப்போட்டா பழங்களை கழுவி தோல் நீக்கி நறுக்கி எடுத்து வைக்கவும். 2கப் பால் காய்ச்சி குளிர்வித்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    1 கப் வெண்ணிலா ஐஸ்க்ரீம் வாங்கி வைக்கவும். நறுக்கிய 6 சப்போட்டா பழங்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து, 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்து விடவும்.

  3. 3

    1/2கப் பால் சேர்த்து அரைத்து விடவும். நன்கு அரைத்தவுடன் மீதமுள்ள பாலையும் சேர்த்து வைப்பர் பிளேடில் அரைத்து விடவும். 1 சப்போட்டா பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.

  4. 4

    1 கண்ணாடி கோப்பையில் அரைத்த சப்போட்டா பழத்தின் ஜூசை ஊற்றி அதன் மேலே 1 கப் வெண்ணிலா ஐஸ் கிரீமை சேர்த்து, பொடியாக நறுக்கிய சப்போட்டா பழத்தை தூவி அலங்கரித்து பரிமாறவும்.😄😄 சுவையான சப்போட்டா மில்க் ஷேக் ரெடி😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes