மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#Millet #GA4 #Week4 #Milkshake நம்முடைய பாரம்பரிய விவசாயத்தில் பயிர் செய்து விளைவித்த சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை நாகரீகமற்ற உணவுகள் என்று நாம் தூக்கிப் போட்டுவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா என களமிறங்கியதும் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை நம்மை நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டன. என்னதான் மருந்துகள் சாப்பிட்டாலும் உணவு முறையால் மட்டும் தான் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்று உணர்ந்து கொண்டபின், இப்போது தான் நம் பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பியிருக்கிறோம். சரி அதை விடுங்க இனி வரும் காலங்களிலாவது நோய் இல்லாமல் வாழ உணவில் சிறுதானிய வகைகளை அதிகம் எடுத்து கொள்வோம்...
இவ்விடத்தில் நான் கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி ஆகியவை கலந்த மல்டி மில்லட் மில்க் ஷேக் செய்து காண்பிக்க போகிறேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்
  1. 100 மில்லிபால்
  2. 2 ஸ்பூன்ராகி
  3. 1/2 ஸ்பூன்கம்பு
  4. 1/2 ஸ்பூன்திணை
  5. 1/2 ஸ்பூன்வரகு
  6. 1/2 ஸ்பூன்சாமை
  7. 1/2 ஸ்பூன்குதிரைவாலி
  8. 4 ஸ்பூன்தேன்
  9. 1 ஸ்பூன்அவுல்
  10. 3 துண்டுகள்ஐஸ் கட்டி
  11. அலங்கரிக்க
  12. 1 ஸ்பூன்பிஸ்தா
  13. 1 ஸ்பூன்முந்திரி

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மேலே கூறிய அனைத்தையும் முதல் நாள் இரவு ஊற வைத்து,கழுவி காய வைக்கவும்.பின்னர் அதை இளம் வருப்பாக வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் 100 மில்லி பாலை காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ளவும்.அதே மாறியே அரைத்து வைத்ததில் ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.

  3. 3

    இரண்டையும் 05 நிமிடங்கள் ஆற வைத்து விட்டு,பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் மூன்று ஐஸ் கட்டி துண்டுகள், கொதிக்க வைத்த மாவு கரைசல்,தேன் 4 ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.

  4. 4

    பிறகு ஒரு கண்ணாடி டம்ளாரில் முதலில் ஒரு ஸ்பூன் அவுல்,வெட்டி வைத்த பிஸ்தா துண்டுகள் போடவும்.பின்னர் மிக்ஸியில் அடித்ததை ஊற்றி கொள்ளவும்.அடுத்து ஆற வைத்த பாலையும் சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    கடைசியில் அதன் மேலே பிஸ்தா துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.சுவையான மல்டி மில்லட் மில்க் ஷேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes