ஹனி கேக்

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#GA4#week4
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
12-15 பேர்
  1. 400 கி மைதா மாவு
  2. 200 கிராம் சர்க்கரை
  3. 200 மில்லி பால்
  4. 100 கிராம் வெண்ணெய்
  5. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 2 முட்டை
  8. 11/2 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  9. ஒரு பின்ச் சால்ட்
  10. 2 டேபிள் ஸ்பூன் தேன்
  11. 2 டேபிள் ஸ்பூன் ப்ரூட் ஜாம்
  12. 1/4 கப் டெஸிகேடட் கோகனட்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.குக்கரில் மண் நிரப்பி மிதமான தீயில் 10 நிமிடம் சூடு பண்ணவும்.

  2. 2

    ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைக்கவும். வெனிலா எசன்ஸ் சேர்த்து மேலும் கலந்து கொள்ளுங்கள். வெண்ணையை உருக்கி சேர்க்கவும்.

  3. 3

    சர்க்கரையை பொடி பண்ணி சேர்க்கவும். மைதா மாவு,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு எல்லாவற்றையும் சலித்துச் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக கலக்கவும்.*அடித்து கலக்கினால் கேக் கடினமாக வரும்.

  4. 4

    ஒரு அலுமினிய ட்ரேயில் பட்டர் க்ரீஸ் செய்து மைதா மாவை டெஸ்ட் செய்து கலவையை சேர்க்கவும். நன்றாக இரண்டு தடவை தட்டி கொள்ளவும். இப்போது குக்கரில், (கேஸ்கட் வெயிட் போட வேண்டாம்) வைக்கவும்.

  5. 5

    40-50 நிமிடம் பேக் பண்ணி எடுக்கவும். டூத்பிக்கினால் கேக்கின் மேல் குத்தவும். ஒரு பானில் தேன் சிறிது தண்ணீர் சேர்த்து சூடு பண்ணி கேக்கின் மேல் ஊற்றவும்.

  6. 6

    பிறகு அதே பேனில் ஜாம் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் சூடு பண்ணி இதில் மேலே ஊற்றவும். இப்போது இந்த டெஸிகேட்டட் கோகனட் மேலே தூவவும். நம்முடைய சூப்பரான ஹனி கேக் தயார் ஒரு மணி நேரம் கழித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes