சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikilanku cutlet recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

#kids1
சேனைக்கிழங்கு உடம்புக்கு நல்லது. ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோ சேனைக்கிழங்கு
  2. 1 ஸ்பூன் பொட்டுக்கடலை
  3. 1 வெங்காயம்
  4. சிறிதுகருவேப்பிலை
  5. சிறிதுமல்லித்தழை
  6. 1ஸ்பூன் வர மிளகாய் தூள்
  7. 1ஸ்பூன் மல்லித்தூள்
  8. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. தேவையானஅளவு உப்பு
  10. பொரித்தெடுக்க எண்ணெய்
  11. 1/4 கப் பிரெட் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சேனைக்கிழங்கை சிறு துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும். வாணலியில் சேனைக்கிழங்கு தண்ணீர் சிறிது உப்பு சேர்த்து பாதி வேக விடவும்.

  2. 2

    பின் மிக்ஸியில் சேனைக்கிழங்கு பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தி அரைத்த விழுது வெங்காயம் மல்லித்தழை கறிவேப்பிலை உப்பு வர மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    பின் சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி கொண்டு அதை பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.

  5. 5

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து தட்டியதை போட்டு பொரித்து எடுக்கவும்.

  6. 6

    சூடான சுவையான சேனைக்கிழங்கு கட்லெட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes