கர்நாடகாபொன்னி காளான் பிரியாணி (Karnataka ponni kaalaan biryani recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

எளிமையான முறையில்
#ownrecipe

கர்நாடகாபொன்னி காளான் பிரியாணி (Karnataka ponni kaalaan biryani recipe in tamil)

எளிமையான முறையில்
#ownrecipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 250 கி காளான்
  2. 1 கப் கர்நாடகாபொன்னி அரிசி
  3. 1 வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 1இஞ்ச் இஞ்சி
  6. 4 பல் பூண்டு
  7. பச்சை மிளகாய்
  8. 1பிரிஞ்சி இலை,4 கிராம்பு,1நட்சத்திர சோம்பு,
  9. 1 ஸ்பூன் சீரகம்
  10. 1 ஸ்பூன் சோம்பு 1 பட்டை 1ஏலக்காய்
  11. 1 ஸ்பூன் மஞ்சள்,மல்லி,மிளகாய்தூள்
  12. கைப்பிடி அளவு மல்லி இலை,புதினா
  13. தேவைக்கேற்ப நெய்,எண்ணெய்,உப்பு,தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும் இஞ்சிப்பூண்டை விழுதாக தட்டிக் கொள்ளவும்

  2. 2

    அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் ஊரவைத்துக் கொள்ளவும் பின் காளானை வெட்டிக் கொள்ளவும்

  3. 3

    காளான் சுத்தம் செய்யும் முறைப்படிச் செய்துக் கொள்ளவும் முதலில் கழுவி விரலால் தள்ளினால் மேல்த் தோல் உறியும் உறித்து விட்டதும் தண்டில் கீழ் புறத்தை வெட்டி நீக்கிக் கொள்ளவும் வெட்டியதும் மீண்டும் ஒருமுறை தண்ணீரில் போட்டு கழுவியதும் சமைக்க தயாராகும்

  4. 4

    முதலில் குக்கரீல் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் சூடேரியதும் பட்டை,பிரிஞ்சிஇலை,கிராம்பு,ஏலக்காய்,சோம்பு,நட்சத்திரப்பூ,சீரகம்,ஏலக்காய் போட்டுப் பொறிக்கவும்

  5. 5

    பின் வெங்காயம்ச் உப்புச் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சிபூண்டு விழுதுச் சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    பிறகு பச்சைமிளகாய்,தக்காளிச் சேர்க்கவும்

  7. 7

    பின்பு மஞ்சள்தூள்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள்ச் சேர்த்து வதக்கவும்

  8. 8

    வதங்கவும் காளானைச் சேர்க்கவும் காளானில் தண்ணீர் வெளியேறும் என்பதால் தண்ணீர் தேவைக்கு மட்டும் சேர்க்கவும் காளானில் உள்ள தண்ணீரில் கொதித்ததும் அரிசியைச் சேர்க்கவும் பின் அரிசிக்கான தண்ணீரைச் சேர்க்கவும்

  9. 9

    பின் மல்லி இலை,புதீனா இலைகளைச் சேர்க்கவும் உப்பு,காரம் சரிப்பார்த்து குக்கரை மூடிக் கொள்ளவும்

  10. 10

    3 விசில் வரை பொறுத்திருக்கவும் பிரியாணி தயார் பரிமாறவும் மிக எளிமையான முறையில் செய்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes