எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் அரிசி
  2. 2கேரட்
  3. 6பீன்ஸ்
  4. 2உருளைக்கிழங்கு
  5. 1கைப்பிடி பச்சை பட்டாணி
  6. 5-6பச்சை மிளகாய்
  7. 2வெங்காயம்
  8. 1தக்காளி
  9. முழு கரம் மசாலா
  10. தேவையான அளவுஉப்பு
  11. தேவையான அளவுஎண்ணெய்
  12. 1ஸ்பூன் நெய் (விருப்பம்)
  13. 1டம்ளர் தேங்காய் பால் (விரும்பினால்)
  14. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம், தக்காளியை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாய்யை 2ஆக கீறி வைக்கவும். விரும்பிய காய்களை நறுக்கி வைக்கவும். அரிசியை 15நிமிடம் ஊற வைக்கவும். பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் 2டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா பொருட்களை சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்னர் நறுக்கிய அனைத்து காய்களையும் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 2நிமிடம் வதக்கவும். பின்னர் ஊற வைத்த அரிசியை சேர்த்து அதனுடன் 1க்கு 2என்ற விகிதத்தில் 1கப் தேங்காய் பால் 1கப் தண்ணீர் சேர்க்கவும்.

  4. 4

    தேங்காய் பால் வேண்டாம் என எண்ணினால் 2கப் தண்ணீர் சேர்க்கவும். இந்த இடத்தில் உப்பை சரி பார்க்கவும். பின்னர் குக்கரை மூடி 3 விசில் விடவும்.

  5. 5

    பின்னர் குக்கரை திறந்து 1ஸ்பூன் நெய் சேர்த்து கிளறினால் சுவையான வெஜ் புலாவ் தயார். நெய்யை கடைசியில் சேர்ப்பதால் உணவின் சுவை மணம் கூடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes