ஹார்ட் ஸ்டப்டு சப்பாத்தி (Stuffed chappathi recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

ஹார்ட் ஸ்டப்டு சப்பாத்தி (Stuffed chappathi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடங்கள்
5நபர்கள்
  1. 1கப் பட்டாணி
  2. 1கப் பீன்ஸ்
  3. 1கப்கேரட்
  4. 1கேப்ஸிங்கம்
  5. 1+1/2இஞ்சிப,பூண்டு பேஸ்ட்
  6. 1ஸ்பூன் சோம்பு
  7. 2வெங்காயம்
  8. 3தக்காளி
  9. 2கொத்து கறிலீப்
  10. கொத்தமல்லி தழை
  11. 1+1/2ஸ்பூன் மல்லி தூள்
  12. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  13. 1/4ஸ்பூன் மஞ்சள் பொடி
  14. உப்பு
  15. 5ஸ்பூன் ஆயில்

சமையல் குறிப்புகள்

45நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் ஆயில் விட்டு, சோம்பு போட்டு தாளிக்கவும்.

  2. 2

    பிறகு அதில் வெங்காயம், கறிலீப் போட்டு பின்க் கலர் வரும் வரை வதக்கவும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

  3. 3

    அடுத்து அதில் தக்காளி போட்டு 2நிமிடம் வதக்கவும்.

  4. 4

    அடுத்து அதில் காய், உப்பு போட்டு வதக்கி மூடி வைக்கவும். இடை இடையே கிளறி விடவும்.

  5. 5

    காய் பாதி வெந்தவுடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி சேர்த்து 5நிமிடம் வதக்கினால் ஸ்டப்பிங் ரெடி. கடைசியாக மல்லி தழை தூவவும்.

  6. 6

    அடுத்து சப்பாத்தி தேய்க்கவும். அதை ஹார்ட் சேப்பில் கட் பண்ணவும்.

  7. 7

    அதன் நடுவில் மசாலா வைத்து, சுற்றி தண்ணீர் தடவவும்.

  8. 8

    பிறகு அதை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ஒட்டவும்.

  9. 9

    அதை தோசை கல்லில் போட்டு, எடுக்கவும். நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes