சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14#

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

நான்கு பேர்
  1. 300 கிராம்சேனைக்கிழங்கு
  2. 2வர மிளகாய்
  3. 15 பல்பூண்டு
  4. ஒரு டீஸ்பூன்கரம் மசாலா
  5. சிறிய துண்டுஇஞ்சி
  6. அரைடீஸ்பூன்மஞ்சள் தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. ஒரு டீஸ்பூன்எலுமிச்சை சாறு
  9. இரண்டரை டீஸ்பூன்சோம்பு
  10. 1 டீஸ்பூன்மிளகு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சேனைக் கிழங்கை தோல் நீக்கி தடிமனாக சதுர துண்டுகளாக அரிந்து வைத்துக்கொள்ளவும். அதில் உப்பு மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.(அதிலுள்ள அரிப்பை நீக்குவதற்காக)

  2. 2

    பிறகு சேனைக்கிழங்கை இட்லி பாத்திரத்தில் வைத்து 75% அவித்து எடுக்கவும் பிறகு ஆற வைக்கவும்.

  3. 3

    மேற்சொன்ன அனைத்து அழைப்பதற்கான பொருட்களையும் மிக்சியில் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஆரிய சேனை கிழங்கில் இருபுறமும் நன்கு தடவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

  4. 4

    தவாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் இருபுறமும் நன்கு வேக வைத்து பொரித்து எடுக்கவும்.

  5. 5

    சுவையான சேனைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி இது தயிர் சாதம் ரசம் சாதம் சாப்பிடுவதற்கு பெஸ்ட் காம்பினேஷன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes