எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/2 கிலோ கோழிக்கறி
  2. 2நறுக்கிய வெங்காயம்
  3. 2நறுக்கிய தக்காளி
  4. 1 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதுகள்
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. கொத்தமல்லி சிறிதளவு
  7. 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
  8. 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  9. ஒரு மேஜைக்கரண்டி தனியா
  10. 1/2 மேஜைக்கரண்டி சோம்பு
  11. 1/2 மேஜைக்கரண்டி சீரகம்
  12. 1/2 மேஜைக்கரண்டி மிளகு
  13. 4 வர மிளகாய்
  14. 3 மேஜைக்கரண்டி தேங்காய்
  15. 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்
  16. 2 குழி கரண்டி சமையல் எண்ணெய்
  17. 2 மேஜைக்கரண்டி குழம்பு மிளகாய் தூள்
  18. உப்பு தேவையான அளவு
  19. ஒரு இன்ச் பட்டை
  20. 2 கிராம்பு
  21. சின்ன துண்டு ஜாதிபத்திரி
  22. 1பிரிஞ்சி இலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் கறியை நன்கு சுத்தம் செய்த பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு பிரிந்து நன்கு பிசைந்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின் செட்டிநாடு மசாலா செய்ய, ஒரு கடாயில் தனியா சோம்பு சீரகம் மிளகு வரமிளகாய் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் நன்கு ஆற வைத்துக் கொண்டு பின் மிக்ஸியில் சேர்த்து நைசாக தூள் செய்து கொள்ளவும், செட்டிநாடு மசாலா தயார், அடுத்தது ஒரு அகலமான கடாயை வைத்து எண்ணை ஊற்றி, எண்ணை காய்ந்ததும் பட்டை கிராம்பு ஜாதிபத்ரி பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், தக்காளி மற்றும் இஞ்சி-பூண்டு விழுதுகள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்,

  5. 5

    வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு மற்றும்
    குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும், பின் ஊற வைத்திருக்கும் கறியை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

  6. 6

    மசாலா கறியில் நன்கு இறங்கும் வரை வதக்கிக்கொள்ளவும், பின் உப்பு சேர்த்து கிளறி விடவும்

  7. 7

    கறி வேகும் வரை அளவிற்கு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும், பின் கிளறி ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்

  8. 8

    தண்ணீர் சுண்டியதும் தட்டை எடுத்து நன்றாக கிளறவும், பின் செட்டிநாடு மசாலா 2 மேசைக்கரண்டி அல்லது 3 மேஜைக்கரண்டி அளவு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  9. 9

    கிளறியதும் நல்லெண்ணெய் சேர்த்து நன்று நன்கு கிளறவும், அடுத்ததாக கறிவேப்பிலையை மேலாகத் தூவி 2 லிருந்து 3 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்

  10. 10

    என்னை மேலாக வரும்போது அடுப்பை அணைத்து விடவும், ருசியான செட்டிநாடு சிக்கன் தயார் இதை நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்துகொடுத்து எப்படி இருந்தது என்று எனக்கு கமெண்ட் செய்யவும் நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes