தேவையான பொருட்கள்

50 நிமிடம்
6 பேர்
  1. 1கப்ரவை -
  2. 2கப்சர்க்கரை-
  3. 1/4 கப்நெய் -
  4. 1/4 கப்சமையல் எண்ணெய் -
  5. 2 மேசைக் கரண்டிமுந்திரி -
  6. 3/4 கப்அண்ணாச்சி பழம் (சிறு துண்டுகளாக நறுக்கியது) -
  7. 3/4 கப்ஆப்பிள்(சிறு துண்டுகளாக நறுக்கியது) -
  8. புட் கலர் - சிறிது

சமையல் குறிப்புகள்

50 நிமிடம்
  1. 1

    நறுக்கிய பழங்களுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை கலந்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்

  2. 2

    பிறகு அடி கனமான ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள நெய் மற்றும் எண்ணெய்யை சேர்க்கவும்

  3. 3

    பிறகு முந்திரியை போட்டு சிறிது நேரம் வறுக்கவும். சிவக்க தேவை இல்லை

  4. 4

    பிறகு அதில் உலர் திராட்சை சேர்க்கவும்

  5. 5

    உலர் திராட்சை பலூன் போல் போங்க வேண்டும்

  6. 6

    பிறகு அதில் ரவையை சேர்க்கவும். வாசம் வரும் வரை வறுக்கவும்(சிவக்க தேவையில்லை)

  7. 7

    பிறகு 2 1/2 கப் கொதிக்கும் தண்ணீரை ஊற்றவும்

  8. 8

    பிறகு தீயை நன்கு குறைத்து 4 நிமிடம் மூடி வைக்கவும்

  9. 9

    பிறகு மூடியை நீக்கி சிறிது கிளறி விடவும்

  10. 10

    இந்த சமயத்தில் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை சேர்க்கவும்.கை விடாமல் நன்கு கிளற வேண்டும். அல்லது கட்டி விழும்.

  11. 11

    பிறகு அதில் புட் கலர் சேர்க்கவும்

  12. 12

    பிறகு நறுக்கி வைத்துள்ள பழங்களை சேர்க்கவும்

  13. 13

    மேலும் பழங்களும் வெந்து கேசரி பதம் வரை கிளறவும்

  14. 14

    சுவையான ப்ரூட் கேசரி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

அர்ஜுன்
அன்று

Similar Recipes