வெந்தய சாதம்

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145

#keerskitchen
வெந்தய சாதம் மிகவும் ஈஸியாகவும் சிம்பிளாகவும் செய்யக்கூடிய ஒரு ரெசிபி... இதில் வெந்தயம் உள்ளதால் சுகர் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு உணவு... மதியம் லன்ச் பாக்ஸ்சுக்கு ஒரு அருமையான ரெசிபி....... இதனுடன் வேர்க்கடலை சட்னி, முட்டை, கத்திரிக்காய் புலிகாய் , உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து சாப்பிட்டால் கலக்கல் காம்பினேஷன் ஆக இருக்கும்.....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 2 கப் சாப்பாடு அரிசி
  2. 2பெரிய வெங்காயம் நறுக்கியது
  3. 2தக்காளி நறுக்கியது
  4. 15 பல் பூண்டு
  5. 4பச்சை மிளகாய் சினிமா
  6. சிறிதுகறிவேப்பிலை
  7. 4 ஸ்பூன் ரீபைண்ட் ஆயில்
  8. 2 ஸ்பூன் வெந்தயம்
  9. 1/2 ஸ்பூன் கடுகு
  10. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1 ஸ்பூன் உப்பு
  12. 1 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    வெந்தய சாதம் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்...

  2. 2

    சாதத்திற்கு தேவையான 2 கப் அரிசியை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

  3. 3

    ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி,கடுகு,வெந்தயம்,
    பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்...

  4. 4

    வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் தக்காளி,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்...

  5. 5

    அரிசியை சேர்த்தவுடன் கிளறி..அதில் 4 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்..... பிறகு 4 விசில் விட்டு பிறக்கவும் இறக்கவும்....

  6. 6

    அருமையான சுட சுட வெந்தய சாதம் ரெடி வாங்க சாப்பிடலாம்.......(வெந்தய சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.....)

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145
அன்று

Similar Recipes