சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. ‌ மிகவும் நல்லது. #magazine2

சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)

இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. ‌ மிகவும் நல்லது. #magazine2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
6பேர்
  1. 1கப்சிவப்பு சின்ன காராமணி
  2. 2ஸ்பூன்வெந்தயம்
  3. 2ஸ்பூன்கடுகு
  4. எலுமிச்சை அளவுபுளி
  5. 1டீஸ்பூன்து.பருப்பு
  6. 2சி.மிளகாய்
  7. 1ஆர்க்குகறிவேப்பிலை
  8. ருசிக்குகல் உப்பு
  9. 2டேபிள் ஸ்பூன்சாம்பார் பொடி
  10. 1/4கப்ந.எண்ணெய்
  11. 1டீஸ்பூன்ம.தூள்
  12. 1டீஸ்பூன்பெருங்காயம்
  13. சிறிதுகொத்தமல்லி தழை
  14. தேவைக்குதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    காராமணியில் உப்பு,ம.தூள், போட்டு, வெந்நீரில்1/2மணி ஊறவிடவும்.

  2. 2

    குக்கரில் போடாமல்,பாத்திரத்தில் போட்டு குழையாமல் வேகவிடவும்.

  3. 3

    புளியை ஊறவைத்து வடிகட்டிக் கொள்ளவும்.கடாயில் புளிக்கரைசலை ஊற்றி,சாம்பார் பொடி,உப்பு போட்டு புளி வாசனை போக கொதிக்கவிடவும்.வெறும் இலுப்பச்சட்டியில் கடுகு,வெந்தயத்தைபோடவும்.

  4. 4

    பிறகு பொன்னிறமாக வறுக்கவும்.வறுத்து ஆறினதும், மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

  5. 5

    புளி வாசனை போனதும்,வெந்த காராமணியை போடவும்.ஒன்று சேர கொதித்ததும்,வறுத்து பொடித்த பொடியை போடவும்.5நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

  6. 6

    கடாயில் ந.எண்ணெய் காய்ந்ததும்,கடுகு,வெந்தயம், து.பருப்பு,பெருங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை,தாளித்து குழம்பில் கொட்டவும்.

  7. 7

    தாளித்தும் குழம்பை நன்கு கலக்கவும்.மேலே கொத்தமல்லி போடவும்.

  8. 8

    சுவையான,வித்தியாசமான*சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு* தயார்.செய்து பார்த்து குடும்பத்தாரை அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes