பனானா மிக்ஸட் நட்ஸ் கேக் (Banana mixed nuts cake recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
  1. 1கப் மைதா மாவு
  2. 3வாழைப்பழம்
  3. 1/2கப் சர்க்கரை
  4. 1/4 கப் உருக்கிய வெண்ணெய்
  5. 1/4கப் மிக்ஸ்டு நட்ஸ் (பாதம், முந்திரி, வால்நட், கோல்டன் திராட்சை, கருப்பு திராட்சை)
  6. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பௌலில் வாழைப் பழங்களை சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.

  2. 2

    அதில் உருக்கிய வெண்ணெய்,சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்யவும். சர்க்கரை கரைந்து வரும் வரை பீட் செய்து எடுக்கவும்.

  3. 3

    பின்பு வானிலை எசென்ஸ் சேர்த்து பீட் செய்து வைக்கவும்.

  4. 4

    வேறு ஒரு பௌலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

  5. 5

    ஒரு பௌலில்,கோல்டன் திராட்சை, கருப்பு திராட்சை,பாதாம், வால்நட், முந்திரியை பொடியாக நறுக்கி, மைதா மாவு சேர்த்து கலந்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    பின்னர் வாழைப்பழ கலவையில் மைதா கலவையை சேர்த்து ஸ்பேட்டுலா வைத்து கலந்து கொள்ளவும்.

  7. 7

    நன்கு கலந்த பின் மைதா கலந்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து கலக்கவும்.

  8. 8

    பின்னர் பட்டர் பேப்பர் போட்ட லோப்ட் மோல்ட்டில் கேக் கலவையை சேர்க்கவும். அதன் மேல் பிரவுன் மற்றும் வொயிட் சாக்கோ சிப்ஸ் தூவி பேக் செய்ய தயார் செய்யவும்.

  9. 9

    மைக்ரோ வாவ் ஓவனில் 180 டிகிரியில் வைத்துக்கொண்டு பத்து நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து ஐம்பது நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் வாழைப்பழ மிக்ஸட் நட்ஸ் கேக் தயார்.

  10. 10

    கேக் பத்து நிமிடங்கள் சூடு ஆறியவுடன் பட்டர் பேப்பரை எடுத்து விடவும். பின்னர் ஒரு துணியால் மூடி அரை மணி நேரம் விட்டு விட்டு கட் செய்து மேலே பொடித்த சர்க்கரை தூவவும்.

  11. 11

    இப்போது மிகவும் சுவையான வாழைப்பழ நட்ஸ் கேக் சுவைக்கத்தயார்.

  12. 12

    இந்த சுலபமான, சுவையான கேக்கை கிறிஸ்துமஸ்க்கு அனைவரும் செய்து ருசிக்கவும்.

  13. 13

    அனைத்து சகோதரிகளுக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் 💐😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes