எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

55 நிமிடங்கள்
  1. 1&1/2 கப் மைதா மாவு
  2. 1/4கப் கோகோ பவுடர்
  3. 1/2 கப் சர்க்கரை பவுடர்
  4. 1&1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 1/2கப் பட்டர்
  7. 3முட்டைகள்
  8. 1/4 கப் சாக்கோ சிப்ஸ்
  9. 1/4 கப் பால்
  10. 1டீஸ்பூன் வெனிலா எசென்ஸ்

சமையல் குறிப்புகள்

55 நிமிடங்கள்
  1. 1

    கேக் செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும். ஒரு பௌலில் மைதா மாவு சேர்த்து அத்துடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.

  2. 2

    பின்னர் கோகோ பவுடர் சேர்த்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பீட்டரில் பட்டர், சர்க்கரை பவுடர் சேர்த்து பீட் செய்து பின்னர் முட்டைகளை ஒவ்வொரு முட்டையாக சேர்த்து பீட் செய்யவும்.

  4. 4

    பீட் செய்து எடுத்த பின் வெனிலா எசென்ஸ், மைதா மாவு கலவையை சேர்த்து நன்கு கலக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக பால், மாவு மாறி மாறி சேர்த்து கலக்கவும்.

  5. 5

    நன்கு கலந்து கேக் கலவை தயாரானதும் சாக்கோ சிப்ஸ் சேர்த்து கலந்தால் கேக் கலவை தயார்.

  6. 6

    பின்னர் பட்டர் பேப்பர் போட்ட ரவுண்டு கேக் மோல்டில் தயார் செய்த கேக் கலவையை சேர்த்து இரண்டு முறை தட்டில் விடவும்.

  7. 7

    பின்பு மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியசில் 15 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்து ஐம்பத்து நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் சாக்லேட் சாக்கோ கேக் தயார்.

  8. 8

    இந்த சாக்லேட் சாக்கோ கேக் மிகவும் சுவையாக, மிருதுவாக, குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சுவைக்கத் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes