ரசம் ஒரு சகல நோய் நிவாரணி(rasam recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#wt2
வேப்பம்பூ தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு பருப்பு ரசம்
வெள்ளை பூண்டு Maillard reaction மூலம் கருப்பு பூண்டு ஆகிறது, பூண்டு நிறம், சுவை, வாசனை மாறுகிறது. காரமாக இருக்காது, இனிப்பாக இருக்கும், பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் கூட இதை விரும்புவார்கள் ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. ½ கப் துவரம்பருப்பு
  2. 1மேஜைகரண்டி தேங்காய் எண்ணை
  3. 1தேக்கரண்டி கடுகு
  4. 1தேக்கரண்டி வேப்பம்பூ
  5. 1தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  6. 3 வர மிளகாய்
  7. 1தேக்கரண்டி இஞ்சி நசுக்கியது
  8. ¼ கப் கறிவேப்பிலை
  9. சின்ன துண்டு கட்டி பெருங்காயம்
  10. ½ தேக்கரண்டி மஞ்சள் பொடி
  11. 1கப் தக்காளி துண்டுகள்
  12. 1 முழு கருப்பு பூண்டு
  13. 2மேஜை கரண்டி ரச பொடி
  14. ¼கப் கொத்தமல்லி
  15. தேவையானஉப்பு
  16. ரசம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க

  3. 3

    ரசப்பொடி நான் தயாரித்தது புருப்புகள், கொத்தாமல்லி விதைகள், மிளகாய், வெந்தயம், சீரகம், மிளகு வறுத்து பொடித்தது
    ¼கப் கொதிக்கும் நீரில் பெருங்காயம் ஊறவைக்க. நீரில் கறையும்
    குக்கர் பாத்திரத்தில் 4 கப் நீர் சேர்த்து பருப்பைக் குக்கரில் வேக வைக்க.

  4. 4

    மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம் தாளிக்க, வேப்பம்பூ, மஞ்சள் பொடி, இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து வதக்க. தக்காளி சேர்த்து வதக்க. பூண்டு வெளி தோலை நீக்கு; உள்ளே இருக்கும் கருப்பு பல்களை நசுக்கி சேர்க்க. 6 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க.
    வேக வைத்த பருப்பு, வேக வைத்த மேல் நீரையும் சேர்க்க. `10 நிமிடம் ஹை flame வ்லேமில் கொதிக்க வைக்க;

  5. 5

    கொதி வந்ததும். 2 மேஜைகரண்டி ரச பொடி 1கப் சூடு நீரில் நன்றாக கலக்கி ரசத்துடன் சேர்த்து கலக்க. நன்றாக 4-5 நிமிடங்கள் கொதிக்கட்டும் உப்பு சேர்த்து கலக்கி பெருங்காயம் சேர்க்க; 2 கொதி வரட்டும், அடுப்பை அணைக்க. கொத்தமல்லி சேர்க்க. வீடு முழவதும் கம கம வென்று மணக்கும். ரஸம் தயார். ருசிக்க. பரிமாறும் போலிர்க்கு மாறுக, தனியாகவும் குடிக்கலாம் சாதத்துடன் கலந்தும் ரூசிக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes