தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

ஒரு மாதம் வரை கெடாமல் வைத்து இருக்கும் பிரயாணம் போகும்போது அவசரத்திற்கும் ஏற்ற ஒரு குழம்பு. இட்லி, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.

#ATW3 #TheChefStory

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1000 கிராம் தக்காளி
  2. 150 கிராம் புளி
  3. 500 கிராம் நல்லெண்ணெய்
  4. 25 கிராம் மிளகாய்த்தூள்
  5. 25 கிராம் கருவேப்பிலை
  6. 25 கிராம் கடுகு உளுத்தம்
  7. 5 கிராம் சோம்பு
  8. 5 கிராம் பட்டை
  9. 5 கிராம் ஏலக்காய்
  10. 5 கிராம் கிராம்பு
  11. 15 கிராம் பெருங்காயம்
  12. 250 கிராம் பூண்டு
  13. 15 கிராம் கசகசா
  14. 2 கிராம் வெந்தயம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளியை கழுவி காயவைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு மற்றும் கருவேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு, விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    பாதி அளவு எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து, தக்காளி துண்டுகளை சேர்த்து தோல் சுருங்கும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

  3. 3

    சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா பெருங்காயம், வெந்தயம் ஆகிய அனைத்தையும் தனித்தனியே வறுத்து, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    மற்றொரு பாத்திரத்தில் மீதி எண்ணெயில் கடுகு சேர்த்த தாளித்து பூண்டு, கருவேப்பிலை விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். இதில் சுருங்கிய தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

  5. 5

    அதில் மிளகாய் தூள், உப்பு,மஞ்சள் தூள், கலவையை சேர்த்து, பச்சை மனம் போனதும் வெந்தயம், பெருங்காயம், கசகசா தூளை சேர்க்கவும்.

  6. 6

    கடைசியாக கிராம்பு, பட்டை, ஏலக்காய் பொடி செய்ததை சேர்த்து, எண்ணெய் மேலே மிதந்து வரும்போது, அடுப்பை அணைத்து, இறக்கலாம். இப்போது நமது தக்காளி குழம்பு தயார் நன்கு ஆறியவுடன், ஈரம் இல்லாத பாட்டிலில் அடைத்து அதிக நாட்கள் உபயோகப்படுத்தலாம்.😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes