பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50நிமிடங்கள்
5பேர்
  1. 200கி பன்னீர்
  2. வதக்கி அரைக்க:
  3. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  4. 2டேபிள் ஸ்பூன் பட்டர்
  5. 2பெரிய வெங்காயம்
  6. 3தக்காளி
  7. 1துண்டு இஞ்சி
  8. 3பல் பூண்டு
  9. 5கிராம்பு
  10. 2ஏலக்காய்
  11. 10முந்திரி)
  12. 1டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  13. 1/2டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  14. 3/4டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  15. 1/4டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
  16. 1/2டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  17. 1/2டேபிள் ஸ்பூன் சீரக தூள்
  18. தேவையானஅளவு உப்பு
  19. 5டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம்
  20. 1ஸ்பூன் வெள்ளை சர்க்கரை
  21. 1டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மெதி
  22. 1டேபிள் ஸ்பூன் நறுக்கிய மல்லித்தழை
  23. தாளிக்க:
  24. 2டேபிள் ஸ்பூன் ஆயில்
  25. 2டேபிள் ஸ்பூன் பட்டர்
  26. 1பிரியாணி இலை
  27. 1மிளகாய்

சமையல் குறிப்புகள்

50நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    கடாயில்,2டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் பட்டர் சேர்த்து சூடானதும்,ஏலக்காய், கிராம்பு,இஞ்சி,பூண்டு,சேர்த்து பொரிந்ததும், நீள் வாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும், முந்திரி மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறி,மூடி போட்டு 10நிமிடங்களுக்கு நன்றாக மசியும் படி வேக விட்டு,இறக்கி ஆறவைக்கவும்.

  4. 4

    ஆறியவற்றை,மிக்சி ஜாருக்கு மாற்றி, அரைத்து,பின் சலிக்கவும்.

  5. 5

    மீண்டும் கடாயில்,எண்ணெய் மற்றும் பட்டர் சேர்த்து சூடானதும்,பிரியாணி இலை,மிளகாய் சேர்த்து தாளித்து,எடுத்து வைத்துள்ள மசாலா பொடிகள் சேர்த்து கிளறவும்.

  6. 6

    பின் அரைத்து,சலித்து வைத்துள்ள விழுதை சேர்த்து கிளறவும்.

    பார்க்க அழகாக இருக்கும்.

    இதனுடன் 300 ml அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். மேலும், தக்காளியின் புளிப்பு சுவையை குறைக்க சர்க்கரை சேர்க்கவும்.

  7. 7

    நன்றாக கலந்து விட்டு, அதனுடன் 2டேபிள் ஸ்பூன் அளவு ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து, உப்பு சேர்த்து,மூடி போட்டு 10நிமிடங்கள் சிம்மில் வைத்து கொதிக்க வைக்கவும்.

  8. 8

    10நிமிடங்கள் கழித்து,கஸ்தூரி மெதி மற்றும் மல்லி இலை,மீண்டும் ஒரு முறை 2டேபிள் ஸ்பூன் அளவு க்ரீம் சேர்த்து கிளறி 3நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

    க்ரீம் சேர்க்க சேர்க்க சுவை கூடும்.இறக்கிய பின் 1டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

  9. 9

    அவ்வளவுதான். சுவையான, க்ரீமியான, பன்னீர் பட்டர் மசாலா ரெடி.

    இது, நான், குல்ச்சா,சப்பாத்தி-க்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes