* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#wt3
@Renuka Bala's recipe
சகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது.

* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)

#wt3
@Renuka Bala's recipe
சகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
6 பேர்
  1. 2 கப்பாலக் கீரை (பொடியாக நறுக்கினது)
  2. 1/4 கப்து.பருப்பு
  3. 1/4 கப்ப.பருப்பு
  4. 1வெங்காயம்
  5. 2தக்காளி
  6. 2ப.மிளகாய்
  7. 2சி.மிளகாய்
  8. 1 ஸ்பூன்சீரகம்
  9. ருசிக்குகல் உப்பு
  10. 1 ஸ்பூன்காஷ்மீரி மி.தூள்
  11. 1 டீ ஸ்பூன்சர்க்கரை
  12. 1 டேபிள் ஸ்பூன்தே.எண்ணெய்
  13. 1 டீ ஸ்பூன்கடுகு
  14. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  15. தேவையான அளவுதண்ணீர்
  16. 1 டீ ஸ்பூன்ம.தூள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    து.பருப்பு, ப.பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனை நன்கு களைந்து, தேவையான தண்ணீர்,தே.எண்ணெய், ம.தூள்,உப்பு சேர்த்து, குக்கரில் போட்டு மூடி போட்டு மூடவும்.

  3. 3

    தேவையான விசில் விட்டு குழைய வேக விடவும்.பருப்புடன், நறுக்கின கீரை, சர்க்கரை போட்டு, அதனுடன், உப்பு, ப.மிளகாய் போடவும்.

  4. 4

    பின்அடுப்பை சின்னதாக்கி, ஒன்று சேர நன்கு கிளறி, வெங்காயம், தக்காளி, காஷ்மீரி மி.தூள் போட்டு,குக்கரை மூடாமல் வேக விடவும்.

  5. 5

    பிறகு அடுப்பை நிறுத்தி விட்டு,கூட்டை ஒரு பௌலில் மாற்றவும். சிறிய கடாயில் தே.எண்ணெய் காய்ந்ததும், கடுகை போட்டு பொரிந்ததும், சீரகம், சி.மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.

  6. 6

    தாளித்ததை கூட்டில் கொட்டி நன்கு கிளறவும்.இப்போது சுடசுட,* பாலக் கீரை கூட்டு* தயார்.

  7. 7

    சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த கூட்டை போட்டு சாப்பிட்டதில், அட்டகாசமாக இருந்தது. செய்து பார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes