வீட்டிலேயே தயாரித்த கோதுமை நூடுல்ஸ்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#goldenapron3
#book
#நாட்டு

நூடுல்ஸ் எல்லோருக்கும் பிடிக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமாக சமைகளம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பரிமாறுவது
  1. 1.5 கப் கோதுமை மாவு
  2. 1 கப் குடைமிளகாய்
  3. 1 கப் வெங்காயம்
  4. 1 கப் முட்டை்கோஸ்
  5. 1 கப் கேரட்
  6. 1டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள்
  7. 1/2டீஸ்பூன் மஞ்சள்தூள்
  8. 1/2டேபிள்ஸ்பூன் கரமசாலா
  9. உப்பு
  10. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    மாவு சப்பாத்தி மாவை விட கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 20 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்.

  3. 3

    பின் மாவை நன்கு தேய்துகொள்ள வேண்டும்.

  4. 4

    படத்தில் காட்டியபடி 3 முறை இது போல் மடித்து மடித்து தேய்த்து கொள்ள வேண்டும்.

  5. 5

    மிகவும் மெலிதாக இல்லாமல் தேய்த்து கொள்ள வேண்டும். பின் மூன்றாக மடித்துக் கொள்ளவும்.

  6. 6

    படத்தில் காட்டியபடி வெட்டிக் கொள்ளவும்.

  7. 7

    மேலே காட்டியபடி செய்ய கடினமாக இருந்தால் இந்த முறையை பயன்படுத்தி பார்க்கவும். இந்த அட்சியை பயன்படுத்தி இப்படி பிழிந்து கொள்ள வேண்டும். பிழியும் போது கோதுமை மாவை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் ஒட்டாமல் வரும்.

  8. 8

    தண்ணீர் கொதிக்க வைத்து கொதித்த பின்னர் மாவை சேர்க்கவும். 7 - 10 நிமிடம் வரை கொதிக்க விடவும். பின் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  9. 9

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மற்றும் நறுக்கிய காய்களை சேர்த்து வதக்கவும்.

  10. 10

    வதங்கியதும் மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரமசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

  11. 11

    பச்சை வாசனை போன பின் நூடுல்ஸ் சேர்த்து பொறுமையாக கிளறி, 2 நிமிடம் மூடி வைக்கவும். சுவையான சத்தான நூடுல்ஸ் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி. சப்பாத்தி மாவை கொதிக்கும் தண்ணீரில் போடடாள் கறையாதா?

எழுதியவர்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes