கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. ஒரு கப்கோதுமை மாவு
  2. 5 ஸ்பூன்நாட்டுச்சக்கரை
  3. ஒரு ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  4. ஒரு ஸ்பூன்பேக்கிங் சோடா கால் டீஸ்பூன் கொக்கோ பவுடர்
  5. கால்ஸ்பூன்இன்ஸ்டன்ட் காபி தூள்
  6. ஒரு ஸ்பூன்வினிகர்
  7. ஒரு ஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்
  8. சன் பிளவர் ஆயில் ஒரு கப் வெதுவெதுப்பான பால் அரை டம்ளர்
  9. 10கருப்பு திராட்சை
  10. 6முந்திரி

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். கேக் செய்யும் பாத்திரத்தில் ஆயில் தடவி மாவு தூவி வைக்கவும். ஒரு இட்லி பாத்திரத்தில் கால் இன்ச்மணல் பரப்பிஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு சிம்மில் வைத்து பத்து நிமிடம் சூடு பண்ணவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் நாட்டுச்சர்க்கரை 5 ஸ்பூன் ஒரு கப் ஆயில் சேர்த்து ஒரு முறை அரைக்க. கோதுமை மாவு, வெனிலா எசன்ஸ், கொக்கோ பவுடர்,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா, வினிகர், பால்,கால் ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி தூள் சேர்த்து ஒருமுறை அரைக்கவும் கெட்டியாக இருந்தால் மீண்டும் சிறிதளவு பால் சேர்த்து கேக் மாவு பதத்திற்கு அரைக்கவும்.

  3. 3

    அரைத்த மாவை கேக் செய்யும் பாத்திரத்தில் மாற்றி இருமுறை தட்டி விடவும். மேலே பொடித்த முந்திரி கருப்பு திராட்சை தூவி அலங்கரிக்கவும் பிரீ ஹிட் செய்த இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி விடவும். மிதமான தீயில் 5 நிமிடம் குறைந்த தீயில் 30 நிமிடமும் வைத்து வேக வைக்கவும்

  4. 4

    35 நிமிடம் கழித்து கத்தியால் உள்ளே குத்தி பார்க்கவும் வேகாவிட்டால் மீண்டும் பத்து நிமிடம் வேகவிடவும் ஆறவைத்து தட்டில் மாற்றவும். சுவையான கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் தயார். கோதுமை மாவு கேக் சாக்லேட் சுவையுடன் மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes