கணவா_மீன்_நெய்_தொக்கு

Sindhuja Manoharan
Sindhuja Manoharan @cook_22825145

#hungrytummyforever #nutrient1 #seafood கணவாவில் புரத சத்து அதிகம் உள்ளது , கூட முந்திரியிலும் புரதம் உள்ளது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 4-5 சிவப்பு மிளகாய் காரம் பார்த்து
  2. 8-10 முந்திரி ஊற வைத்தது
  3. 2 டீஸ்பூன் கச கசா
  4. 2 டீஸ்பூன் சீரகம்
  5. 1 டீஸ்பூன் மிளகு
  6. 1 டீஸ்பூன் மல்லி
  7. 1 டீஸ்பூன் சோம்பு
  8. தாளிக்க:
  9. 3/4 கிலோ கணவாய் மீன்
  10. தேவைக்கு நெய்
  11. 1 வெங்காயம்
  12. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  13. 1 தக்காளி
  14. தேவைக்கு உப்பு
  15. 1 கொத்து கறிவேப்பிலை
  16. 1 கொத்து கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    மசாலா அரைப்பதற்கு கீழ் உள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் வாணலியில் வாசம் வரும் வரை லேசாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்

  2. 2

    பின்பு ஆறியவுடன் தண்ணீர் சேர்த்து மசாலா அரைத்து கொள்ள வேண்டும்

  3. 3

    கணவாய் மீனை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும்

  4. 4

    வாணலியில் நன்றாக நெய் சேர்த்து சூடானதும் கரிவேப்பிலை சேர்த்து நீள வாக்கில் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்க்கவும்

  5. 5

    வெங்காயம் நல்ல பொன்னிறமாக வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போற வரை வதக்கிய பின், தக்காளி சேர்த்து மசியும் அளவு வதக்கவும்.

  6. 6

    பின்னர் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கிய பின் சிறிது நேரம் கழித்து கணவாய் மீனை சேர்க்கவும்

  7. 7

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும், கணவாய் நன்றாக வேகும் வரை

  8. 8

    கொதித்த உடன் நமக்கு தேவையான பதம் அளவுக்கு நன்றாக வத்த வைக்க வேண்டும். இடை இடையில் நெய் ஊற்றி கிளறி விட்டு கொள்ளணும்.

  9. 9

    கடைசியில் மேலாக நெய் ஊற்றி, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.

  10. 10

    கம கமா கணவாய் மீன் நெய் தொக்கு தயார். சூடான சாதத்துடன், அல்லது சப்பாத்தி, பரோட்டா உடன் சேர்த்து சாப்டா சூப்பரா இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (7)

எழுதியவர்

Sindhuja Manoharan
Sindhuja Manoharan @cook_22825145
அன்று

Similar Recipes