மைசூர் பாக்

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#book
#அம்மா
எனது அம்மாவுக்கு எப்பொழுதும் மிகவும் பிடித்தது மைசூர் பாக்கு அதனால் அன்னையர் தினத்திற்கு என் அம்மாவிற்கு நான் இன்று மைசூர் பாக்கு செய்து கொடுத்தேன். நன்றாக இருந்தது. வாயில் போட்டால் கரையும் படி இருந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 டம்ளர் கடலைமாவு
  2. 1 டம்ளர் சர்க்கரை
  3. 1/4 டம்ளர் தண்ணீர்
  4. 3/4 டம்ளர் எண்ணெய்
  5. 1/2 டம்ளர் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கடலை மாவை சிம்மில் வைத்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு அதை சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    எண்ணையை ஒரு பேசனில் வைத்துக்கொள்ளவும். இந்த கடலை மாவை சலித்து அதில் போட்டு கட்டி வராமல் நன்றாக கரைத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு ஒரு டம்ளர் சர்க்கரையை வாணலியில் கொட்டி அதில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். பதம் மாறக்கூடாது ஒரு கப்பில் தண்ணீர் வைத்துக் கொள்ளவும் அந்த தண்ணீரை தொட்டுவிட்டு சர்க்கரைப் பாகை தொட்டுப் பார்க்கவும் ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் தொட்டுப்பார்த்தால் நடுவில் ஒரு கம்பி பதம் வரும் அதுதான் சரியான பதம்.

  4. 4

    இப்பொழுது நாம் கரைத்து வைத்த கடலை மாவை அதில் சிறிது சிறிதாக கொட்டி கைவிடாமல் கிளறவும்.

  5. 5

    இப்பொழுது நெய்யை எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்த நெய்யையும் சிறிது சிறிதாக இதில் ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

  6. 6

    சிறிது நேரத்திலேயே நன்றாக கடலை மாவு வெந்து நெய் வெளியே வர ஆரம்பிக்கும் அதோடு ஸ்டாப் பண்ணி விடலாம்.

  7. 7

    ஆரம்பிக்கும் பொழுதே ஒரு தட்டில் நெய்யை நன்றாக தடவி வைத்துக் கொள்ளவும் அப்பொழுதுதான் நாம் பதம் வந்த உடனே எடுத்து ஊற்றுவதற்கு சரியாக இருக்கும்.

  8. 8

    இப்பொழுது அதை சூட்டுடன் பீஸ் போட்டு வைத்து 10 நிமிடம் ஆறவிடவும் டிஸ்டப் செய்ய வேண்டாம்.பிறகு அதை இன்னொரு தட்டில் கவுத்தினால் மைசூர் பாக்கு நன்றாக வரும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes