😋😋மைசூர் பாக்😋😋😋

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#CF2
இனிப்பு பண்டங்கள் என்றாலே அனைவருக்கும் நாவிலே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.

அதிலும் மைசூர் பாகு என்றால் அடடே. இந்த மைசூர் பாகு கர்நாடகாவில் உள்ள மைசூரை மன்னர்கள் ஆண்ட காலத்தில் அரசரின் சமையல் காரர் செய்த ஒரு இனிப்பு பண்டம்.

பின்னாளில் இது நாடு முழுவதும் பரவி இன்று உலகம் முழுவதும் தயாரித்து ருசிக்கிறார்கள். இன்று எத்தனையோ இனிப்பு வகைகள் வந்தாலும் இதன் சுவைக்கு ஈடாகுமா? என்ன

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
10 நபர்கள்
  1. 2 கப் - கடலை மாவு (சலித்து வைத்துக் கொள்ளவும்)
  2. 2 கப் - சர்க்கரை
  3. 1/2 கப் - தண்ணீர்
  4. 1 கப் - நெய்
  5. 1 கப் - வாசனை இல்லாத எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் எண்ணெயைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நெய்யின் அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.)

  2. 2

    அதன்பிறகு சர்க்கரை பாகு செய்வதற்கு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

  3. 3

    சர்க்கரைப் பாகின் அளவு அறை கம்பி பதம் முதல் ஒரு கம்பிப் பதம் வரை இருக்கவேண்டும்.

    அதற்கு மேல் சர்க்கரை பாகு இருந்தால் மைசூர் பாக் மிகவும் இறுக்கமாக இருக்கும். அதற்குக் குறைவாக இருந்தால் மைசூர்பாக் அல்வா போல் ஆகிவிடும். (இது முக்கியமான குறிப்பு)

  4. 4

    சர்க்கரை பாகு தயாரானதும் அதில் சலித்து தயாராக வைத்துள்ள கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து விடவும். மொத்தமாக சேர்த்து விடக்கூடாது கட்டி பிடித்து விடும்.

  5. 5

    கடலை மாவை சர்க்கரை பாகில் முழுவதுமாக கலந்ததும் எண்ணெய் மற்றும் நெய் கலவையை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து அதனுள் சேர்த்து முழுவதுமாக கலந்த பிறகு அடுத்த கரண்டியை சேர்த்துக் கொள்ளவும்.

    (நெய் மற்றும் எண்ணெய் கலவையை சேர்க்கும் பொழுது மிகவும் சூடாக இருத்தல் அவசியம் மாவினுள் அதை சேர்க்கும் பொழுது நன்றாக ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... என்று சத்தம் வரவேண்டும்)

  6. 6

    அனைத்தையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. சற்று நேரத்தில் எண்ணெய் பிரிந்து மேலே வருவது போல் இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைத்து நெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

  7. 7

    பாத்திரத்திற்கு மாற்றும் முன் அந்த பாத்திரத்தில் நெய் தடவி கொள்ளவும் அல்லது பட்டர் பேப்பர் வைத்து கொள்ளவும். பாத்திரத்தில் சேர்த்ததும் அழுத்தம் கொடுக்கக்கூடாது கரண்டி வைத்து லேசாக சமநிலைப்படுத்தி விடவும்.

    சற்று நிமிடத்தில் மிதமாக ஆறியதும் கத்தி வைத்து விரும்பிய வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
    அதன்பிறகு வெட்டுவது கடினமாக இருக்கும்.

  8. 8

    நன்றாக ஆறியதும் எடுக்கவும். சுவையான மைசூர் பாக் வீட்டிலேயே சுலபமாக தயார் செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🥳🥳🥳🥳

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes