எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/2கிலோ சிக்கன்
  2. 1 வெங்காயம்
  3. சிறியதக்காளி
  4. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. சிறிதளவுகறிவேப்பிலை
  6. சிறிதளவுகொத்தமல்லி
  7. 2ஸ்பூன் சோம்பு
  8. 1ஸ்பூன் சீரகம்
  9. 2ஸ்பூன் மிளகு
  10. 2ஸ்பூன் மல்லி
  11. 1பட்டை
  12. 2 கிராம்பு
  13. 3 காய்ந்த மிளகாய்
  14. 1/2ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  15. 2ஸ்பூன் தயிர்
  16. தேவையானஅளவு உப்பு
  17. 3ஸ்பூன் எண்ணெய்
  18. 1ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கடாயில் சோம்பு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், மல்லி, பட்டை, கிராம்பு சேர்த்து லேசாக வாசனை வரும் வரை வதக்கவும். பிறகு இதை பவுடராக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

  2. 2

    சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.வானலில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி பிறகு சிக்கனை இதில் சேர்த்து கிளறி மூடி வைத்து வேக வைக்கவும். சிக்கனில் தண்ணீர் விட்டு வரும் வரை மூடி வைக்கவும்.

  4. 4

    பிறகு அரைத்த பவுடர், காஷ்மீர் மிளகாய்த்தூள்இதில் சேர்த்து 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes