ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1பாக்கெட் நூடுல்ஸ்
  2. 1முட்டை
  3. 1/4கப் முட்டைகோஸ்
  4. 1/4கப் கேரட்
  5. 1/2 குடைமிளகாய்
  6. தேவையானஅளவு உப்பு
  7. 1ஸ்பூன் நூடுல்ஸ் மசாலா
  8. 1ஸ்பூன் வினிகர்
  9. 1ஸ்பூன் மிளகு தூள்
  10. 1ஸ்பூன் சோயா சாஸ்
  11. 2மேசைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு, எண்ணெய் விட்டு கொதித்து வந்ததும் நூடுல்ஸை உடைத்து சேர்த்து வேக வைத்து எடுத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

  2. 2

    முட்டைகோஸ்,குடைமிளகாய் இவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கேரட்டை கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ளவும். வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து சிறிது நேரம் வெந்ததும் அதனை லேசாக பிரித்து விட்டு கிளறி விடவும்.

  3. 3

    பிறகு இதில் முட்டைகோஸ், குடைமிளகாய், கேரட் சேர்த்து கிளறவும். தேவையான அளவு உப்பு, மிளகு தூள், நூடுல்ஸ் மசாலா சேர்த்து கிளறி விடவும்.

  4. 4

    காய்கறிகள் முக்கால் பதத்திற்கு வெந்ததும் வேக வைத்து எடுத்த நூடுல்ஸை இதில் சேர்த்து கிளறி விடவும். பின்னர் சோயா சாஸ், வினிகர் சேர்த்து கிளறி விடவும்.

  5. 5

    இரண்டு போர்க் ஸ்பூன் பயன்படுத்தி ஒன்றாக கலந்து வருமாறு கிளறி விடவும்.தேவைப்பட்டால் கடைசியாக மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி சூடாக பரிமாறவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes