எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
7 பேர் தல 1 பரிமாறுவது
  1. 1&1/2 கப் மைதா
  2. 1கப் பால்
  3. 3/4கப் பொடித்த சர்க்கரை
  4. 1/3கப் உருகிய வெண்ணெய் (அல்லது எண்ணை விருப்பப்படி சேர்க்கவும்)
  5. 1டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபித் தூள்
  6. 1/4கப் கோகோ பவுடர்
  7. 1டேபிள் ஸ்பூன் சுடு தண்ணீர்
  8. 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  9. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  10. 1டீஸ்பூன் வினிகர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணெய் அல்லது எண்ணை சேர்த்து, பொடித்த சர்க்கரை சேர்த்து ஒயர் விஷ்க் வைத்து நன்கு கலக்கவும்.

  2. 2

    பின் பால், வென்னிலா எஸ்சென்ஸ் சேர்த்து கலக்கி வைக்கவும்.

  3. 3

    இன்ஸ்டன்ட் காபியுடன், சூடான தண்ணீர் கலந்து, மேலே உள்ள கலவையுடன் சேர்த்து ஒன்றாக கலந்து தயாராக வைக்கவும்.

  4. 4

    மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

  5. 5

    சலித்த மைதா கலவையை, முதலில் கலந்து வைத்துள்ள, காபி, பால் (wet) கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். கடைசியாக ஒரு டீஸ்பூன் வினிகர் கலந்து தயாராக வைத்துள்ள மஃபீன் மோல்ட்டில் முக்கால் கப் கேக் கலவையை சேர்க்கவும்.

  6. 6

    கேக்கின் மேல் சாக்கோ சிப்ஸ் தூவி அலங்கரிக்கவும்.

  7. 7

    ஐந்து நிமிடங்கள் கேக் செய்யும் பாத்திரத்தை ப்ரீ ஹீட் செய்து, கேக் மோல்ட்டுகளை வைத்து முப்பது நிமிடங்கள் பேக் செய்யவும். டூத் பிக் வைத்து பேக் ஆனதை உறுதி செய்து, இறக்கவும்.

  8. 8

    சூடு தணிந்தவுடன் கேக்களை வெளியில் எடுத்து வைக்கவும்.

  9. 9

    இப்போது சுவையான காபி, கோகோ கேக் தயாராகிவிட்டது, அனைவரும் இதே முறைபடி செய்து சுவைக்கவும்.

  10. 10

    மைக்ரோ வேவ் ஓவனில் செய்வதாக இருந்தால்180டிகிரி வைத்து ஐந்து நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து, பின்னர் இருப்பது நிமிடங்கள் பேக் செய்யவும். ***ஒவ்வொரு ஓவன் பேக்கிங் நேரம் வேறுபடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes