கடுகு பொடி சாதம்

Sahana D
Sahana D @cook_20361448

#mom
குழந்தை பிறந்த பிறகு வயிற்றில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்க உதவும் இந்த கடுகு பொடி. கெட்ட கழிவுகளை நீக்காமல் விடுவதால் வயிறு பெரியதாக தெரிகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் சாதம்
  2. 5 ஸ்பூன் கடுகு
  3. 1 ஸ்பூன் சீரகம்
  4. 1 ஸ்பூன் மல்லி
  5. 2 வர மிளகாய்
  6. சிறிதளவுகருவேப்பிலை
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1 பின்ச் பெருங்காய தூள்
  9. 2 ஸ்பூன் நிலக்கடலை
  10. 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
  11. 1 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் நெய் விட்டு கடுகை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து பொரிந்து கண்ணாடி போல் பள பளப்பாக தெரியும் வரை வறுக்கவும்.

  2. 2

    பிறகு அதே வாணலியில் கறிவேப்பிலை வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பிறகு மல்லி சீரகம் இரண்டையும் வருத்துக் கொள்ளவும்.

  4. 4

    மிக்ஸியில் கடுகு வர மிளகாய் கறிவேப்பிலை மல்லி சீரகம் உப்பு பெருங்காய தூள் சேர்த்து நைசாக அரைக்கவும்.

  5. 5

    வடித்த சாதத்தை ஆற வைத்து கொள்ளவும். வாணலியில் ஆற வைத்த சாதம் நல்லெண்ணெய் வறுத்த நிலக்கடலை கடுகு பொடி சேர்த்து உப்பு பார்த்து கிளறி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes