சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய்  சாதம்

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#mom
இந்த சிவப்பு கவுணி அரிசி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் உகர்ந்த உணவு. வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். நன்கு ஊற வைத்து வேகவைக்க வேண்டும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 1/2 கப் சிவப்பு கவுணி அரிசி
  2. 1/4கப் அவரை காய்
  3. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 5 சாம்பார் வெங்காயம்
  6. 1டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  7. 1டீஸ்பூன் எண்ணை
  8. 1டேபிள் ஸ்பூன் நெய்
  9. 1/4டீஸ்பூன் கடுகு
  10. 1/4டீஸ்பூன் உளுந்து, கடலை பருப்பு
  11. உப்பு தேவையான அளவு
  12. கறிவேப்பிலை
  13. மல்லி இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கவுணி அரிசியை நன்கு கழுவி, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் வைத்து இறக்கவும்.

  2. 2

    சாம்பார் வெங்காயம், அவரைக் காய் இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணை சேர்த்து சூடானதும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு, சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள அவரை காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேகவைக்கவும்.

  4. 4

    ஐந்து நிமிடங்கள் கழித்து திறந்து, காய் வெந்தவுடன், துருவிய தேங்காய், வடித்து தயாராக வைத்துள்ள கவுணி அரிசி சாதத்தை சேர்த்து கலந்து ஒரு ஸ்பூன் நெய் நன்கு கலந்து இறக்கினால் கவுணி அரிசி அவரைக்காய் சாதம் தயார்.

  5. 5

    இப்போது சுவையான, சத்தான சிவப்பு கவுணி அரிசி அவரைக்காய் சாதம் சுவைக்கத்தயார். தாய்மைக்கு மிகவும் உகர்ந்து இந்த சாதத்தை சிறுவர் முதல் பெரியார் வரை அனைவரும் சாப்பிடலாம். சத்துக்கள் நிறைந்த இந்த அரிசி, அவரைக்காய் கலந்த சாதத்தை அனைவரும் செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes