எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4உருளைக்கிழங்கு
  2. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. அரை பெரிய வெங்காயம்
  4. பிரட் க்கிராம்ஸ் தேவையான அளவு
  5. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையானஅளவு
  6. கால் ஸ்பூன் மிளகுத் தூள்
  7. 1கைப்பிடி மல்லி இலை
  8. உப்பு தேவையான அளவு
  9. கால் கப் சோள மாவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் மல்லி இலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக் உருளைக் கிழங்குடன் மிளகாய்த்தூள், வெங்காயம், உப்பு மல்லி இலை, மிளகு தூள், பிரட் கிரம்ஸ் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கிண்ணத்தில் கால் கப் சோள மாவு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    கையில் எண்ணெய் தொட்டும் ஒரு உருண்டை எடுத்து சிலிண்டர் வடிவத்தில் உருட்டி வைக்கவும்.

  5. 5

    உருட்டி வைத்த சோள மாவு தண்ணீரில் முக்கி அதன்பிறகு பிரட் கிர்ம்ஸ் பிரட்டி எடுத்து வைக்கவும்.

  6. 6

    அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  7. 7

    இப்போது சுவையான பொட்டேட்டோ நக்கட்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

joycy pelican
joycy pelican @cook_20701700
அன்று

Similar Recipes