எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கட்டு தண்டுக்கீரை
  2. 20 சின்ன வெங்காயம்
  3. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  4. 1/4 டீஸ்பூன் சீரகம்
  5. 1 மிளகாய் வற்றல்
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 1 சிட்டிகை கரம் மசாலா தூள்
  11. தேங்காய் விழுதிற்கு தேவையான பொருட்கள்:
  12. 1/4 கப் தேங்காய்த்துருவல்
  13. 1/4 டீஸ்பூன் சீரகம்
  14. முட்டைக் கலவைக்கு:
  15. 3 முட்டை
  16. 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  17. தேவையானஅளவு உப்பு
  18. 1 சிட்டிகை கரம் மசாலா தூள்
  19. 1 சிட்டிகை மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தண்டுக்கீரை இலைகளை எடுத்து பொடியாக நறுக்கி நன்றாக கழுவிக் கொள்ளவும்.

  2. 2

    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    தேங்காய் விழுதிற்கு தேவையான பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு கரமொரவென அரைக்கவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் மற்றும் மிளகாய் வற்றல் சேர்க்கவும்.

  5. 5

    பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  6. 6

    நன்றாக வதக்கியபின் கீரையை சேர்த்து நன்றாக மிதமான சூட்டில் வதக்கவும்.

  7. 7

    நன்கு வதக்கிய பின் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.

  8. 8

    பின்பு தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்.

  9. 9

    ஒரு பாத்திரத்தில் முட்டை, மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  10. 10

    முட்டை கலவையை கீரை மசியலில் சேர்த்து நன்றாக கிளறவும்

  11. 11

    முட்டை நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes

More Recommended Recipes