தேவையான பொருட்கள்

20 நிமிடம்
மூன்று பேர்
  1. 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  2. 1/8 டீஸ்பூன் கடுகு
  3. 1 பட்டை
  4. 2 ஏலக்காய்
  5. 2 கிராம்பு
  6. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  7. 2 பச்சை மிளகாய்
  8. கொஞ்சம்கருவேப்பிலை
  9. 1பொடியாக நறுக்கிய வெங்காயம்
  10. 1பொடியாக நறுக்கிய தக்காளி
  11. 4 முட்டை
  12. 1/8 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  13. 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  14. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  15. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  16. 2 கப் சாதம்
  17. தேவை என்றால் உப்பு மற்றும் மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு பொழிந்து வந்தவுடன் பட்டை ஏலக்காய் கிராம்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை போட்டு வதக்கவும்

  2. 2

    பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    நன்கு வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள் சீரகப் பொடி கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.

  4. 4

    நன்கு கிளறிய பின் வாணலியில் ஓரத்தில் ஒதுக்கி நடுவில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் 4 முட்டையை ஊற்றி சிறிது நேரம் வேக விட்டு மசாலாவுடன் நன்கு பிரட்டவும்

  5. 5

    மசாலாவுடன் நன்கு பிரட்டி பின் சாதம் சேர்த்து ஒன்றோடு ஒன்றாக கிளறவும். சுவையான முட்டை சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mala
Mala @cook_25058833
அன்று

Similar Recipes