முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#GA4/Drum stick/ Week 25

* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.

* முருங்கைகாய் சாம்பாராக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 4 முருங்கைக்காய்
  2. புளி ஒரு எலுமிச்சை பழ அளவு
  3. 1 டேபிள்ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  4. 1 1/2 டேபிள்ஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. இரண்டு பூண்டு பற்கள்
  8. 2 தக்காளி
  9. 10 சாம்பார் வெங்காயம்
  10. 1 பச்சை மிளகாய்
  11. தாளிப்பதற்கு
  12. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  13. ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு
  14. அரை டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் துவரம்பருப்பு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் பூண்டு சேர்த்து 3 விசில் விட்டு நன்கு வேக வைத்து கொள்ளவும். புளியை ஊறவைத்து சாறு மட்டும் எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியவாறு காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் போட்டு தாளித்து பச்சைமிளகாய் முருங்கைக்காய் தக்காளி சாம்பார் வெங்காயம் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றி நன்கு காய் வேகும் அளவுக்கு மூடி போட்டு வேக விடவும்.

  3. 3

    வேக வைத்த பருப்பை நன்கு மசித்து கொதிக்கும் கலவையுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு அடுப்பை அனைத்து சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மற்றும் கமகமக்கும் முருங்கைக்காய் சாம்பார் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes