முட்டை சேர்க்காத சாஃப்ட் பரோட்டா

#combo1
அதிகம் மணி நேரம் ஊற வைக்காமல், முட்டை சேர்க்காமல், மிருதுவாக செய்யக்கூடிய பரோட்டாவின் ரெசிபி முறையை பகிர்ந்துள்ளேன். கண்டிப்பாக முறையாக செய்தால் ஹோட்டல் சுவையில் சுவையாக வரும். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய பாத்திரத்தில் சலித்த மைதா மாவு, உப்பு, சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால் இவற்றைக் கலந்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை 10 நிமிடங்கள் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவின் மேல் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஈரத்துணியால் மூடி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து மாவை இடது கையின் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலின் நடுவில் அழுத்தம் கொடுத்து தள்ளி ஒரே போல் உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
- 2
பிடித்த உருண்டைகள் மீது 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி எல்லா உருண்டைககளிலும் படும்படி தடவி அரைமணிநேரம் வைக்கவும். அதன் பின் அடுப்பு மேடையில் எண்ணை தடவி ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கையால் அழுத்தி பரப்பி விடவும். இரண்டு உள்ளங்கைகளையும் பயன்படுத்தினால் விரைவாக பரப்ப முடியும். கிரானைட் அல்லது கடப்பா கல்லின் மேல் எண்ணெய் தடவி பரப்பினால் மெல்லிதாக வரும். சிறிது ஓட்டை விழுந்தால் பிரச்சனை இல்லை. முடிந்தவரை மெல்லிதாக பரப்பவும். பரப்பு ஆரம்பிக்கும் முன் கைகளில் எண்ணெய் தொட்டுக் கொண்டு செய்யவும்.
- 3
பரப்பியதை விசிறி போல் மடித்து அதனை சுருட்டி படத்தில் காட்டியுள்ளபடி உருட்டி வைக்கவும். அதன்பின் சுருட்டிய மாவை கைகளால் மெதுவாக அழுத்தம் கொடுத்து தேவையான அளவில் பரப்பி கொள்ளவும். பரோட்டா சற்று கனமாக இருக்க வேண்டும். சூடான தோசைக்கல்லின் மேல் பரப்பிய பரோட்டாவை போட்டு எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு மிதமான தீயில் ஓரங்களை கரண்டியால் அழுத்தம் கொடுத்த படி சுழற்றி சுட்டெடுக்கவும். அதிகமான தீயில் சுட்டால் பரோட்டாவின் மேல்புறம் சிவக்கும் ஆனால் உள்ளே வேகாது.
- 4
இரண்டு புறமும் லேசாக சிவந்து வரும் நேரத்தில் எடுத்துவிடவும். சூடாக இருக்கும் பொழுது இரண்டு கைகளால் பரோட்டாவை உருட்டிக்கொண்டே தட்ட வேண்டும். இவ்வாறு செய்வதனால் பரோட்டா மிருதுவாகவும் அடுக்கடுக்காக ஆறியபின் சாப்பிட்டாலும் மிருதுவாக இருக்கும். இந்த பரோட்டாவை நம் விருப்பத்திற்கேற்ப சால்னாவுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பரோட்டா சால்னா


லேயர் பரோட்டா(layer parotta recipe in tamil)


பட்டூரா(batura recipe in tamil)


ஆலு பரோட்டா


ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்


மைதா பரோட்டா(Maida Paratha recipe in tamil)


மூன்று அடுக்கு வெனிலா கஸ்டர்ட் கேக்


சாரா ஜாமுன்#lockdown #book


கம்பு குக்கீஸ் (Kambu cookies recipe in tamil)


மாங்காய் ஜாம்


ஈஸியான பால் பாயசம்


பஞ்சவர்ண டிலைட் (no essence)


பூசணிக்காய் அடை (pumpkin addai)


பாதுஷா.. BHADHUSHA (Bhadhusha recipe in tamil)


கோதுமை பரோட்டா


பூரி


திருநெல்வேலி அல்வா


கோல்டு(cold) காபி


பரோட்டா


பூரி


ஆரோக்கியமான பாதாம் ஓட்ஸ் குக்கீஸ்


பூரி


பரோட்டா


வாழைப்பூ கிரிஸ்பி பிரை


ஆட்டுக்கறி சில்லி(mutton chilly recipe in tamil)


கோதுமை மாவு பரோட்டா


ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்


சிங்கப்பூர் ஸ்பெஷல் முட்டை பரோட்டா / ரொட்டி பரோட்டா🍳


இன்ஸ்டன்ட் பாம்பே அல்வா #leftover


டோக்லா (Dhokla recipe in tamil)

கமெண்ட்