பாய் வீட்டு சிக்கன் சால்னா

#combo1
கறிக்குழம்பு என்றால் பாய் வீட்டு குழம்பு தான் சுவை என்பது பலரின் கருத்து. அந்த வகையில் இன்று நான் பாய் வீட்டுச் சிக்கன் சால்னா செயீமுறையை பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வானொலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும் இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, மிளகு, சீரகம், சோம்பு, நிலக்கடலை சேர்த்து குறைவான தீயில் 2 நிமிடம் வறுக்கவும். அதன்பின் கசகசா, துருவிய கொப்பரை தேங்காய் இவற்றை சேர்த்து மணம் வரும் வரை குறைவான தீயில் வறுத்து அடுப்பை அணைத்து ஆறியபின் தேவைப்பட்ட தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.(குறிப்பு: கொப்பரை தேங்காய் சேர்த்தால் சுவை கூடும். இல்லாதபட்சத்தில் தேங்காயைத் துருவி சேர்த்துக் கொள்ளலாம்.)
- 2
குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும் இதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். கூடவே நறுக்கிய தக்காளி சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்.
- 3
பின் மஞ்சள் பொடி மிளகாய் பொடி மல்லி தூள் இவற்றை சேர்த்து வதக்கியவுடன் தயிர் சேர்த்து கலந்து விடவும். கழுவி வைத்துள்ள கோழிக் கறியை சேர்த்து அதற்குத் தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்கவும். (குறிப்பு: பரோட்டாவிற்கு சாப்பிடக்கூடிய சாம்னாவில் சிக்கன் துண்டுகள் சிறிய அளவில் இருந்தால் சுவையாக இருக்கும்)
- 4
பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கிய பின் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து கலந்து விடவும். உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் சேர்க்கவும்.
- 5
குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேக வைத்து அடுப்பை அணைக்கவும். கமகம வாசனையுடன் சுவையான பாய் வீட்டு சிக்கன் சால்னா தயார். இவரால் மைதா அல்லது கோதுமை பரோட்டாவுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும். பொதுவாக பரோட்டாவிற்கு சால்னா அதிகம் ஊற்றி சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி


சிக்கன் டோல்மா


பாய் வீட்டு பிரியாணி மசாலா / Garam Masala powder / 3 பொருள்கள் தான்


சால்னா


பாய் வீட்டு வெள்ளை குஸ்கா (Bhai veettu vellai khuska Recipe in Tamil)


கோவை ஸ்பெஷல் பொடி மற்றும் சால்னா


சன்னா மட்டன் சால்னா


பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா


சில்லி உளுந்து கொழுக்கட்டை (Rice Fara) (Chilli ulunthu kolukattai recipe in tamil)


சிம்பிள் சிக்கன் பிரியாணி


பரோட்டா சால்னா


மட்டன் கோஃப்தா சால்னா


சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)


புதினா சிக்கன் / க்ரீன் சிக்கன்


Simple salna (Simple salna recipe in tamil)


புலாவ்


சிக்கன் டிக்கா பிரியாணி


வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)


அவுல் சுண்டல் சாட் (tarri poha)


கோபி பீஸ் கிரேவி


சால்னா(Salna recipe in tamil)


கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ


கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி


தலைப்பு: தேங்காய் பால் சொதி


ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி #thechennaifoodie #the.Chennai.foodie


குளிர் மற்றும் இருமல், வீட்டு தீர்வுக்கான காஷ்யம்


பச்சை மிளகாய் சிக்கன்


பலவ்(pulao recipe in tamil)


பன் பரோட்டா மற்றும் சால்னா

கமெண்ட்