ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்.
  1. ஸ்வீட் கார்ன் 100 கிராம்
  2. பால் 300 மில்லி
  3. பேரிச்சை பழம் நூறு கிராம்
  4. வரகரிசி 100 கிராம்
  5. நெய் தேவையான அளவு
  6. டிரைஃப்ரூட்ஸ் 50 கிராம்
  7. ஏலக்காய்-2

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்.
  1. 1

    முதலில் வரகரிசியை மூன்று பங்கு தண்ணீர் விட்டு வேகவிடவும். நீங்கள் குக்கரில் செய்யற மாதிரி இருந்தால் முதலில் வேக வைக்கவேண்டும் என்று அவசியமில்லை.குக்கர் இல்லாத பொழுது வரகரிசி மூன்று பங்கு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டியது அவசியம்.

  2. 2

    வரகு அரிசி நன்கு வெந்த பிறகு அதில் 300 எம்எல் பால் சேர்க்கவும். பால் சேர்த்து நன்கு கலந்தவுடன் ஸ்வீட் கானையும் அதில் சேர்க்கவும். ஸ்வீட் கான் ஐந்து நிமிடத்தில் வேக தக்க தக்காளி கூடிய திறனுடையது ஆதலால் ரொம்ப நேரம் இது செய்வதற்கு அவசியம் ஏற்படாது.

  3. 3

    ஒரு ஐந்து அல்லது ஆறு நிமிடம் கழித்து அதில் அரைத்து வைத்திருக்கும் பேரிச்சம்பழத்தை சேர்க்கவும். பேரிச்சம்பழத்தில் முதலிலேயே மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த பேரிச்சம் பழம் தான் நம் கீர் கான இனிப்பை கொடுக்க போகிறது. வேறு சக்கரை வெல்லம் ஏதும் இதில் சேர்க்கவில்லை.

  4. 4

    நன்கு கலந்து விடவும் பேரிச்சம்பழம்க‌ட்டிகளில்லாமல் கலந்து விடவும். இப்பொழுது இரண்டு ஏலக்காய்களை நன்கு பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும். மிகவும் கட்டியான மாறி இருந்தால் சிறிதளவு பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  5. 5

    இப்பொழுது நெய்யை சூடாக்கி டிரைபுட்ஸ் நிலை அதில் சேர்த்து லைட்டாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதை கீரை சேர்த்து இறக்கிவிடவும்.உங்களுக்கு ட்ரை ப்ரூட்ஸ் வேண்டுமென்றால் நீங்கள் சேர்க்கலாம் இல்லை என்றால் அப்படியே நீங்கள் சாப்பிடலாம்.

  6. 6

    மிகவும் சுவையானது மற்றும் ஹெல்தியான ஸ்வீட் கார்ன் மில்லட் கீர் தயாராகி விட்டது. உடலுக்கு மிகவும் நல்லது எந்தவித ஆர்டிபிசியல் கலரும் சேர்க்கவில்லை. சக்கரையை வெள்ளம் போன்ற பொருட்களும் இல்லாததால் இது மிகவும் நல்லது அனைவரும் சாப்பிடலாம். ட்ரை செய்து பாருங்கள் நன்றி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes