மூலிகை கசாயம்

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#Immunity
தொற்றுநோய் பரவும் இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த மூலிகை கசாயம். சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்டது .நாங்கள் வீட்டிலேயே மூலிகைப் பொருட்கள் வாங்கி வந்து அரைத்து கசாயம் செய்து வாரத்திற்கு மூன்று முறை குழந்தை முதல் பெரியவர் வரை அருந்தி வருகிறோம் நல்ல பலன் தரும் மூலிகை கசாயம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. அதிமதுரம்
  2. திப்பிலி
  3. விரலி மஞ்சள்
  4. சுக்கு
  5. மிளகு
  6. சீரகம்
  7. ஓமம்
  8. கடுக்காய்
  9. சித்தரத்தை
  10. கிராம்பு
  11. கருஞ்சீரகம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    நாட்டு மருந்து கடையில் நாம் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற அளவு இந்த பொருட்கள் எல்லாத்தையும் தருவார்கள் தேவைக்கேற்ப வாங்கி வந்து ஒவ்வொன்றாக தனி தனியாக வறுத்து உரலில் போட்டு முதலில் இடித்து எடுக்க வேண்டும் பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவேண்டும்

  2. 2

    பவுடர் கொரகொரப்பாக மட்டுமே வரும் அதில் பல பொருட்கள் இருப்பதால் சக்கை சக்கையாகவும் தெரியும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் வைத்து சூடேறியதும் அரைத்த பவுடர் ஒரு ஸ்பூன் மட்டும் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும் வரும்வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து விட வேண்டும்

  4. 4

    பிறகு மூலிகை தேநீர் ஆறியதும் பெரியவர்களுக்கு 50ml குழந்தைகளுக்கு 30ml வீதம் பருகவும்

  5. 5

    கண்டிப்பாக அளவுக்கு அதிகமான ml எடுத்துக்க வேண்டாம் பெரியவர்கள் 50ml சிறியவர்கள் 30ml மட்டுமே போதும் மூலிகைகள் அளவுக்கு அதிகமாக சென்று விட்டால் வேறு ஏதாவது வயறு சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்படும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes