கத்திரிக்காய், தக்காளி, பெர்ல் வெங்காயம் கொத்சு  (gothsu)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#combo4 பொங்கல் கொத்சு காம்போ தமிழ்நாடு பிரசித்தம்.
கார சாரமான சுவையான, சத்தான ருசியான கொத்சு #பொங்கல்-கொத்சு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. ½கப் பயத்தம் பருப்பு,
  2. மசாலா பொடி ஸ்டாக் செய்ய:
  3. 4 மேஜைகரண்டி கடலை பருப்பு
  4. 2 மேஜைகரண்டி உளுத்தம் பருப்பு
  5. 2 மேஜைகரண்டி தனியா
  6. 1 மேஜைகரண்டி மிளகு
  7. ½ தேக்கரண்டி வெந்தயம்
  8. 1 மேஜைகரண்டி சோம்பு
  9. 10 கார வர மிளகாய்
  10. மற்றவை
  11. 2மேஜை கரண்டி நல்லெண்ணெய்
  12. 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  13. 1 தேக்கரண்டி கடுகு
  14. 20 சின்ன வெங்காயம்
  15. ¼ கப் கறிவேப்பிலை
  16. 2அங்குலம் இஞ்சி, தோலுரித்து, மசித்தது
  17. 4பல் பூண்டு, மசித்தது
  18. 2 கப் தக்காளி துண்டுகள்
  19. 2 கப் கத்திரிக்காய் துண்டுகள்
  20. 1 தேக்கரண்டி புளி பேஸ்ட்
  21. 1 தேக்கரண்டி பொடித்த வெல்லம்
  22. சிறியநெல்லிக்காய் அளவு கட்டி பெருங்காயம்
  23. தேவையான அளவு உப்பு
  24. ¼ கப் கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.

  3. 3

    ஒரு கிண்ணத்தில் பருப்புடன், 2 கப் நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைக்க.
    பருப்பு குக்கரில் வெந்துகொண்டிருக்கும் பொழுது மீதி வேலைகள் கவனிக்க

  4. 4

    மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் பெருஞ்சீரகம். கடுகு, போட்டு தாளித்து கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை. மஞ்சள் சேர்த்து வதக்குங்கள், வெங்காயம், நன்றாக வதங்கிய பின், தக்காளி சேர்த்து கிளற.

  5. 5

    கத்திரிக்காய் துண்டுகள் சேர்த்து கிளறி வதக்க. 6 கப் நீர், புளி தண்ணீர் சேர்ததுக்கிளற. வெல்லம் சேர்க்க. பாத்திரத்தை மூடி நெருப்பை அதிகரிக்க, கொதித்த பின் நெருப்பை குறைக்க. பின் வேகவைத்த பருப்பை குக்கரிலிறிந்து எடுத்து அதோடு சேர்த்து கிளற.
    கொதித்த பின் 1 மேஜைகரண்டி மசாலா பொடி சேர்த்து கிளற. கொதிக்கட்டும், கொத்சு சிறிது கெட்டியாகும். நெருப்பை குறைக்க கையால் பெருங்காயம் நன்றாக கரைத்து பாதி இதில் சேர்க்க. (மீதி பாதி பொங்கலுக்கு)

  6. 6

    உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி அலங்கரிக்க அடுப்பை அணைக்க
    சுவையான சத்தான மணமான கார சாரமான கொத்சு தயார். பரிமாறுவதற்க்கு முன் சுவைத்து பாருங்கள்
    பரிமாறும் போலிர்க்கு கொத்சு மாற்றுக,

  7. 7

    வேண்டுமானால் மேலே மறுபடியும் சிறிது சூடான எண்ணையில் கடுகு, சீரகம் மிளகாய், கறிவேப்பிலை வறுத்து கொத்சு மேல் போட்டு அலங்கரிக்கலாம். பொங்கலுடன் பரிமாறுக, தோசை, இட்லி கூடவும் சுவையாக இருக்கும்
    கவனிக்க கொத்சு சம்பாறைவிட கெட்டியாக இருக்க வேண்டும். பூண்டு வாசனை பிடிக்காவிவட்டால் சேர்க்க வேண்டாம். வெல்லம் தவிர்க்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (3)

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes