காரா கருணைக்கிழங்கு ஆம்லெட்

J.Mumtaj begum
J.Mumtaj begum @andavar
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 200 கிராம்காரா கருணைக்கிழங்கு -
  2. 2வெங்காயம் -
  3. 1பச்சை மிளகாய் -
  4. 2முட்டை -
  5. 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் -
  6. தேவையான அளவுஉப்பு -
  7. சிறிதளவுகருவேப்பிலை -
  8. சிறிதளவுகொத்தமல்லி -
  9. தேவையான அளவுநெய் -

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    காரா கருணைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும், அதனுடன் ஒரு வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். 2 முட்டை எடுத்து கொள்ளவும்.

  2. 2

    நறுக்கிய காரா கருணைக்கிழங்கு துண்டுகளை மிக்சி ஜாரில் போட்டு நன்கு மாவாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

  3. 3

    மிக்ஸி ஜாரில் ஒரு வெங்காயம் அதனுடன் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

  4. 4

    அரைத்த காரா கருணைக்கிழங்கை பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    மேலும், காரா கிழங்கு கலவையில் அரைத்த வெங்காயத்தையும்,நறுக்கியவெங்காயத்தை சேர்த்து கொள்ளவும். அதனுடன் 2 முட்டைகளை அதில் ஊற்றவும், கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

  6. 6

    தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து அதனுடன் நெய் சேர்த்து, தயார் செய்த கலவையை சிறு ஆம்லெட்களாக தோசைக்கல்லில் ஊற்றவும். மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

  7. 7

    இரு புறமும் வேகவைத்து எடுத்தவுடன், சுவையான காரா கருணைக்கிழங்கு ஆம்லெட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

J.Mumtaj begum
அன்று

Similar Recipes