செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

#banana
வாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
10 பரிமாறுவது
  1. 1 வாழை பூ
  2. ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு
  3. ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு
  4. 2 துண்டு பட்டை
  5. கால் மூடி தேங்காய்
  6. 3 பச்சை மிளகாய்
  7. 4 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை
  8. 2 துண்டு இஞ்சி, 4 பல் பூண்டு
  9. 2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  10. ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. கால் டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  12. சிறிதுகருவேப்பிலை
  13. 2 பெரிய வெங்காயம்
  14. சிறிதுகொத்தமல்லி தழை
  15. தேவையான அளவுஉப்பு
  16. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில வாழைப்பூவில் உள்ள நாரை எடுத்து சுத்தம் செய்து அதை ஒரு தண்ணீரில் போட்டு சிறிது மஞ்சள் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்

  2. 2

    பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு மிளகு பட்டை பொட்டுக்கடலை இஞ்சி பூண்டு கரம் மசாலா மிளகாய்த்தூள் சிறிது கருவப்பிள்ளை தேங்காய் பச்சை மிளகாய் இதை முதலில் கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்

  3. 3

    மசாலா அரைத்த பிறகு வெந்த வாழைப்பூவை போட்டு சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    பிறகு அரைத்த மசாலாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி சிறிது தேவைக்கேற்ப உப்பு சிறிது கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து கையால் நன்கு கலந்துவிட வேண்டும் சிறிது நீர் கோர்த்தல் போல் இருந்தால் சிறிது கடலை மாவை சேர்த்து கெட்டியாக உருண்டை பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    ஒரு வடை செட்டி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவேண்டும் சுவையான வாழைப்பூ கோலா உருண்டை தயாராகிவிட்டது இது அசைவ சுவையில் மிகவும் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும் நீங்களும் செய்து ருசித்துப் பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes