சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
8 பேர்
  1. பிஸ்கட் பேஸ் :-
  2. 250 கிராம்டைஜெஸ்டிவ் பிஸ்கட் -
  3. 25 கிராம்பட்டர் -
  4. சீஸ் டாப்பிங்
  5. 100 கிராம்க்ரீம் சீஸ் -
  6. 250 மி.லிவிப்பிங் க்ரீம் -
  7. 1 கப்கன்டன்ஸ்டு மில்க் -
  8. 1 மேஜைக்கரண்டிஜெலட்டின் -
  9. 1 தேக்கரண்டி சீவிய ஆரஞ்சு தோல்எலுமிச்சை / ஆரஞ்சு ஜெஸ்ட்டு -
  10. 1 தேக்கரண்டிவெண்ணிலா எஸ்ஸென்ஸ் -
  11. ஸ்ட்ராபெரி சாஸ்
  12. 5 பழம்ஸ்ட்ராபெரி -
  13. 2 மேஜைக்கரண்டிசர்க்கரை -
  14. 1 தேக்கரண்டிபட்டர் -
  15. 1 தேக்கரண்டிஎலுமிச்சை சாறு -

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பிஸ்கட் பேஸ் செய்முறை:-
    மேலே குறிப்பிட்ட அளவு டைஜஸ்டிவ் பிஸ்கட்டை மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.இதை சீஸ் கேக் செய்யும் பாத்திரத்திற்கு மாற்றி அத்துடன் பட்டர் சேர்த்து கிளறவும்.

  2. 2

    நன்றாக கிளறிய பின்னர் ஒரு தட்டையான கின்னம் அல்லது டேம்ப்பர் கொண்டு பிஸ்கட் கலவையை சமப்படுத்தவும்.சமபடுத்தியதும் ஒரு அரைமணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.

  3. 3

    மேலே குறிப்பிட்ட அளவு ஜெலட்டின் உடன் சிறிதளவு வெது வெதுவெதுப்பான நீர் ஊற்றி கலந்து வைக்கவும்.

  4. 4

    ஒரு அகன்ற பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு விப்பிங் க்ரீம் எடுத்து நன்றாக அடித்து வைத்து கொள்ளவும்.

  5. 5

    மற்றொரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு க்ரீம் சீஸ் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.பின்பு இத்துடன் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து வைக்கவும்.இந்த கலவையுடன் விப்பிட் க்ரீம் ஐ சேர்க்கவும்.

  6. 6

    நன்றாக அடித்த விப்பிங் க்ரீம், கரைத்து வைத்த ஜெலட்டின், ஆரஞ்சு ஜெஸ்ட்டு மற்றும் சீஸ் கலவை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக ஃபோல்ட் செய்யவும்.வெண்ணிலா எஸ்ஸென்ஸ் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம்.

  7. 7

    இந்த க்ரீம் கலவையை ஃப்ரிட்ஜில் வைத்த பிஸ்கட் பேஸ் இருந்த பாத்திரத்தில் ஊற்றி 3 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.

  8. 8

    3 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்றாக செட்டாகிவிடும் ‌.பின்பு முக்கோண வடிவில் துண்டுகள் இட்டு அதன் மேல் ஒரு ஸ்ட்ராபெரி பழம் வைத்து பரிமாறவும்.அல்லது ஸ்ட்ராபெரி சாஸ் ஊற்றியும் பரிமாறலாம்.

  9. 9

    ஸ்ட்ராபெரி சாஸ் செய்முறை :
    5 ஸ்ட்ராபெரி பழதுண்டுகளுடன், சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக வேகவைத்து பின்பு ஸ்ட்ராபெரி துண்டுகளை கரண்டியால் மசித்து பின்பு பட்டர் சேர்த்து அடுப்பை விட்டு இறக்கி விடவும்.சூடு ஆறியதும் சீஸ் கேக் இன் மேல் ஊற்றி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

Similar Recipes