🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
5 நபர்கள்
  1. கேக் செய்வதற்கு :-
  2. 3/4 கப் - மைதா மாவு
  3. 1/2 கப் - பொடித்த சர்க்கரை
  4. 2 - முட்டை
  5. 1தே.க - பேக்கிங் பவுடர்
  6. 1/8- பேக்கிங் சோடா
  7. 1/2 கப் - எண்ணெய்
  8. 1/4 கப் - பால்
  9. 2 தே.க - வெண்ணிலா எசன்ஸ்
  10. பட்டர் ஸ்காட்ச் நட்ஸ் செய்வதற்கு:-
  11. 1/2 கப் - சர்க்கரை
  12. 2 தே.க - வெண்ணெய்
  13. 1/4 கப் - முந்திரி பருப்பு
  14. 1/4 கப் - பாதாம் பருப்பு
  15. சிட்டிகை அளவு - உப்பு
  16. பட்டர் ஸ்காட்ச் சாஸ் செய்வதற்கு:-
  17. 1/2 கப் - சர்க்கரை
  18. 1/2 கப் - ஃப்ரெஷ் க்ரீம் அல்லது லிம்பிக் க்ரீம்
  19. 1/4 - வெண்ணெய்
  20. சிட்டிகை அளவு - உப்பு
  21. கேக் கிரீம்
  22. 1 கப் - கிரீம்
  23. 1/4 கப் - பொடித்த சர்க்கரை
  24. 1 தே.க - வெண்ணிலா எசன்ஸ்
  25. 1/4 தே.க - புட் கலர்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    முதலில் கேக் செய்வதற்கு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை பாத்திரத்தில் சேர்த்து பீட்டர் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

  2. 2

    முட்டை நுரை போல் பொங்கி வந்ததும். அதில் சிறிது சிறிதாக பொடித்த சர்க்கரை சேர்க்கவும். அதனைத் தொடர்ந்து எண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு பால் சேர்க்கவும். இதனுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஒன்றாக சலித்து சேர்த்துக் கொள்ளவும். (மூன்று பாகங்களாக மாவுப் பொருட்களை சிறிது சிறிதாக சேர்த்து ஒன்று சேர கலக்கவும்)

  4. 4

    கலந்த கேக் கலவையை தயார் செய்து வைத்துள்ள பாத்திரத்தில் (பட்டர் பேப்பர் உபயோகப்படுத்தலாம் அல்லது எண்ணெய் தடவிக் கொள்ளலாம்)ஊற்றி இரண்டு முறை தட்டவும் காற்று குமிழ்கள் வெளியேற செய்வதற்காக.

  5. 5

    இப்போது 10 நிமிடங்கள் முன்கூட்டியே சூடுபடுத்தி வைத்துள்ள குக்கரில் 45 நிமிடங்களுக்கு குறைவான தீயில் வேக வைத்து எடுக்கவும். (குக்கரின் அளவு மற்றும் கேக் பாத்திரத்தின் அளவைப் பொறுத்து வேக வைக்கும் நேரம் மாறுபடும். கு எனவே 30 நிமிடங்களுக்கு பிறகு சோதித்து பார்த்து கொள்ளவும்) ஓவனில் செய்வதென்றால் 180 டிகிரி வெப்பநிலையில் 35 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். கேக் நன்றாக வெந்ததும் ஆற வைத்து மூன்று பாகங்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    இப்போது பட்டர் ஸ்காட்ச் நட்ஸ் செய்வதற்கு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்க்கவும். அடுப்பு குறைவான தீயில் இருப்பது மிகவும் முக்கியம் இல்லை எனில் சர்க்கரை கரிந்து விடும். இடையிடையே கிளறி கொண்டே இருக்கவும்.

  7. 7

    சர்க்கரை நன்றாக கரைந்து தேன் நிறத்திற்கு மாறியதும் அதில் தயாராக நறுக்கி வைத்துள்ள முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை சேர்த்துக் கொள்ளவும். அதனைத் தொடர்ந்து வெண்ணெய் சேர்த்து ஒன்று சேர கலக்கவும்.

  8. 8

    பிறகு ஒரு தட்டில் வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும். பட்டர் பேப்பரூம் பயன்படுத்தலாம். (எடுக்கும்போது ஒட்டாமல் வருவதற்காக). கலந்த கலவையை அதில் ஊற்றி சமப்படுத்தி நன்றாக ஆற வைக்கவும்.

  9. 9

    ஆறியதும் எடுத்து கேக்கில் சேர்ப்பதற்காக பொடியாக தட்டி வைத்துக் கொள்ளவும்.

  10. 10

    இப்பொழுது பட்டர் ஸ்காட்ச் சாஸ் செய்வதற்கு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து நன்றாக கரைய வைக்கவும். (குறைவான தீயில் இருப்பது அவசியம்)

  11. 11

    சர்க்கரை கரைந்ததும் வெண்ணை சேர்த்து கலந்து விடவும். பிறகு அதில் கிரீம் சேர்த்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து நன்றாக ஆற வைக்கவும்.

  12. 12

    பட்டர் ஸ்காட்ச் சாஸ் தயார்.

  13. 13
  14. 14

    விப்பிங் க்ரீம் செய்வதற்கு பாத்திரத்தில் க்ரீம் சேர்த்து குறைவான வேகத்தில் 1 நிமிடம் பீட் செய்யவும். பிறகு மஞ்சள் புட் கலர் சேர்த்து கொள்ளவும்.

  15. 15

    சிறிது சிறிதாக பொடித்த சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.. பிறகு பட்டர் ஸ்காட்ச் எசன்ஸ் சேர்த்து நன்றாக பீட் செய்து கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும்.

  16. 16

    இப்பொழுது கேக்கை அலங்கரிப்பதற்காக கேக் போர்டில் ஒரு பாகத்தை வைத்து அதன் மேல் சர்க்கரை கரைசல் தடவிக் கொள்ளவும். பிறகு தயார் செய்து வைத்துள்ள க்ரீம் தடவிக் கொள்ளவும்.

  17. 17

    க்ரீம் தடவிய பின்னர் பட்டர் ஸ்காட்ச் நட்ஸ் மற்றும் சாஸ் சேர்க்கவும்...இதே போல் அணைத்து பாகத்திற்கும் சேர்த்து மேலே க்ரீம் வைத்து படத்தில் காட்டியவாறு தயார் செய்யவும். மேலும் அலங்கரிபதற்காக விருப்பப்பட்ட டிசைன் செய்து கொள்ளலாம்.

  18. 18

    பட்டர் ஸ்காட்ச் சாஸ் மற்றும் சாஸ் பயன்படுத்தி விருப்ப பட்டவாறு அலங்கரிக்கலாம். இது என் கைவண்ணம்.🤩🤩🤩

  19. 19

    பட்டர் ஸ்காட்ச் சாஸ் மற்றும் நட்ஸ் முன் கூட்டியே தயார் செய்து வைத்தால்.. சுலபமாக இருக்கும்.

  20. 20

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரசித்து ருசித்து சாப்பிடும் பட்டர் ஸ்காட்ச் கேக் இப்பொழுது நம் வீட்டிலேயே சுலபமாக சுவையாக செய்து மகிழலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes