மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I

ருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தயிர் சேர்த்து கலக்கவும். இதில் மைதா மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும். வெதுவெதுப்பான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பீட்டரில் கலந்து கொள்ளவும். இறுதியில் சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து கலந்த கலவையை சதுர பேக்கிங் ட்ரேயில் ஊற்றி 180 டிகிரி இல் பிரீ ஹீட் செய்த ஓவனில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். இதனை நன்கு ஆறவைக்கவும்.
- 2
மேலே குறிப்பிட்டபடி பச்சை நிற கலவையும் தயாரித்து பேக் செய்து அதை ஆற விடவும். இரண்டையும் இதே டின்னில் வைத்து காற்றுப் புகாதபடி கிளிங் ராப் செய்து ஃப்ரிட்ஜில் ஒரு நாள் வைக்கவும்.
- 3
மறுநாள் இரண்டு கலர் ஸ்பாஞ்சையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து நீளவாக்கில் சமமாக அளந்து வெட்டிக் கொள்ளவும். மூன்று பாகங்களாக வெட்டவும். இதில் ஒரு பாகத்தை படத்தில் காட்டியுள்ளபடி கிராஸாக வெட்டிக் கொள்ளவும்.
- 4
பிறகு ஒவ்வொன்றாக வைத்து நம்பர்-1 போல தயார் செய்யவும். அனைத்து செய்முறையும் படத்தில் தெளிவாக உள்ளது.
- 5
க்ரீம் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் க்ரீம் சீஸ் மற்றும் ஐசிங் சுகர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை பீட் செய்யவும். வெளிர் நிறமாக வந்தபின் வெனிலா எசன்ஸ் சேர்ந்து ஒரு முறை கலக்கவும்.
- 6
விப்பிங் க்ரீம் ஐ மற்றொரு கிண்ணத்தில் ஸ்டிஃப் பீக் வரும் வரையில் விப் செய்யவும். இதோடு தயாரித்த க்ரீம் சீசையும் கலந்து ஒன்றாக பீட் செய்து பைப்பிங் பேக்கில் ஸ்டார் நாசில் பொருத்தி கிரீமை சேர்த்து தயாராக வைக்கவும்.
- 7
ஒரு கிண்ணத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும் சர்க்கரை கரைந்த பின் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து பாகை முழுமையாக ஆற வைக்கவும். இப்பொழுது பச்சை நிற கேக்கை நம்பர்1 போல அடுக்கி வைத்து அதன் மேல் சர்க்கரை பாகு தேவையான அளவு அப்ளை செய்யவும். பிறகு கிரீமை கொண்டு அந்த நம்பரின் ஓரம் முழுக்க ஸ்டார் அச்சுப் போல டிசைன் செய்யவும். நடுவில் பழ ஜாமை பைப்பிங் பேகில் சேர்த்து நிரப்பவும்.
- 8
இதன் மேல் சிவப்பு நிற கேக் துண்டுகளை அடுக்கவும். இதேபோல சர்க்கரை பாகு சேர்க்கவும். அதன்மேல் முழுவதுமாக ஸ்டார் வடிவத்தில் க்ரீமை பிழிந்து அழகுபடுத்தவும்.
- 9
ஸ்ட்ராபெர்ரி மற்றும் கிவி பழத்தை படத்தில் காட்டியுள்ளபடி வெட்டிக் கொள்ளவும். தயார் செய்த கேக்கின் மேல் அலங்கரிப்பதற்காக விருப்பப்படி பழங்களை ஆங்காங்கே வைக்கவும். நடுவில் சாக்லெட் மற்றும் மர்ஷ்மெல்லோ வைத்து அலங்கரிக்கவும்.
- 10
வண்ணமயமான கேக் கண் கவரும் வகையில் தயார். இதனை 8 மணிநேரம் ஃப்ரிட்ஜில் செட் செய்ய வைக்கவும். பிறகு பரிமாறலாம்
- 11
நான் செய்த கேக்குகளில் எனக்கு மிகவும் திருப்தியைக் கொடுத்தது இந்த கேக். இதை நாம் விருப்பப்பட்ட நம்பரில் செய்யலாம். பர்த்டே, கல்யாண தினம், கிரகப்பிரவேசம் என்று பலவகையான சமயங்களில் இதை-செய்து கொண்டாடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேக்


ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)


2 அடுக்கு வைட் பாரஸ்ட் கேக்


ஆப்பிள் கேக்(APPLE CAKE RECIPE IN TAMIL)


பிறந்தநாள் கிரீம் கேக்(Birthday cream cake recipe in tamil)


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்


வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)


🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


ப்ளூபெரி வால்கேனோகேக்(blueberry volcano cake recipe in tamil)


குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)


எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)


பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


சாக்லேட் கேக் (brownie recipe in tamil)


ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)


கேரமல் கேக் மற்றும் குளம்பு கண்ணாடி மெருகூட்டல் (Caramel cake recipe in tamil)


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்


ரவை சீஸ் கேக் (Ravai cheese cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


ப்ரூட் கேக் (Fruit cake recipe in tamil)


பட்டர் கேக்(butter cake recipe in tamil)


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)


🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰


ஹனீ கேக் (Honey Cake recipe in Tamil)


ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)

கமெண்ட் (10)