2 அடுக்கு வைட் பாரஸ்ட் கேக்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#colours3
நான் என் மகளின் பிறந்தநாளுக்காக அவள் விரும்பிய இரண்டடுக்கு வைட் பாரஸ்ட் கேக் தயார் செய்தேன். இது மிகவும் ருசியாக கடைகளில் வாங்குவது போல இருந்தது. லாக்டவுன் சமயத்தில் என்னிடம் இருந்த பொருட்களை வைத்து ஒரு வித்தியாசமான முறையில் இதற்கு அலங்காரம் செய்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
10 நபர்கள்
  1. கேக் தயாரிக்க தேவையானவை:
  2. 1 கப் தயிர்
  3. 1/2 கப் ரீபைண்ட் எண்ணெய்
  4. 3/4 கப் பொடித்த சர்க்கரை
  5. 1 தேக்கரண்டி வெண்ணிலா எஸ்ஸென்ஸ்
  6. 2 கப் மைதா மாவு
  7. 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  8. 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  9. சாக்லேட் டெக்ரேசன் தயாரிக்க:
  10. 50 கிராம் டார்க் காம்பவுண்ட் சாக்லேட்
  11. 100 கிராம் வைட் கம்பவுண்ட் சாக்லேட்
  12. தேவையான அளவு எடிபில் கிளிட்டர்
  13. தேவையான அளவு சில்வர் பால்ஸ்
  14. க்ரீம் தயாரிக்க தேவையானவை:
  15. 2 கப் நான் டைரி விப்பிங் க்ரீம்
  16. 1 தேக்கரண்டி வெண்ணிலா எஸ்என்ஸ்
  17. சர்க்கரை பாகு தயாரிக்க தேவையானவை:
  18. 1/2 கப் சர்க்கரை
  19. 1/2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் தயிர், எண்ணெய், வெனிலா எசன்ஸ், சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலந்து கொள்ளவும்.

  2. 2

    இதன் மேல் ஒரு சல்லடை வைத்து அதில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். இதனை கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும். இரண்டு 6 இன்ச் கேக் டின்களை கிரீஸ் செய்து அடிப்பாகத்தில் பட்டர் பேப்பர் வைக்கவும். தயாரித்துள்ள கேக் கலவையை இரண்டு கேக் டின்களில் சமமாக பிரித்து ஊற்றவும்.

  3. 3

    இதனை நன்கு தட்டிவிட்டு, பத்து நிமிடம் பிரீ ஹிட் செய்த ஓவனில் 35 நிமிடங்கள் பேக் செய்யவும். பேக் செய்தபின் கேக்கை அன்மோல்ட் செய்து நன்கு ஆறவிடவும்.

  4. 4

    இதன் மேல் பகுதியில் டூம் போல இருக்கும் பகுதியை வெட்டி எடுக்கவும். மீதமுள்ளதை இரண்டு பாகமாக வெட்டி கொள்ளவும். மற்றொரு கேக்கை ஒரு சிறிய அளவு சில்வர் டப்பாவை கொண்டு வட்டமாக வெட்டி எடுக்கவும். இதனையும் இரண்டாக ஸ்லைஸ் செய்யவும்.

  5. 5

    ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த நான் டைரி விப்பிங் க்ரீம் சேர்த்து பீட் செய்யவும். 2 நிமிடங்கள் கழித்து வெனிலா எசன்ஸை சேர்த்து ஸ்டிப் பீக்ஸ் வரும்வரை விப் செய்யவும்.

  6. 6

    சர்க்கரை மற்றும் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து சர்க்கரை பாகை ஆறவிடவும்.கேக்கின் அடிப்பாகத்தை திருப்பியது போல கீழே வைக்கவும். இதன் மேல் சர்க்கரை பாகை தடவி விடவும். அதன்மேல் விப்பிங் க்ரீம் லேயர் செய்யவும். இதேபோல மேல் பாகத்திலும் செய்யவும். இதே முறையை சிறிய கேக்கிலும் செய்யவும். ஓரங்களிலும் க்ரீம் தடவி கொள்ளவும்.

  7. 7

    இப்பொழுது பெரிய கேக்கின் மீது சிறிய கேக்கை வைக்கவும். இது நகராமல் இருக்க 2 மூங்கில் குச்சிகளை உள்ளே சொருகவும். தயார் செய்த கேக்கை பிரிட்ஜில் வைக்கவும்.

  8. 8

    சாக்லேட் பூ தயாரிக்க, காம்பவுண்ட் சாக்லேட்களை உருக்கி கிண்ணங்களில் எடுத்துக் கொள்ளவும். வயிட் சாக்லெட்டில் கொஞ்சம் டார்க் சாக்லேட்டை ஊற்றி பல் குத்தியினால் மார்பில் எபெக்ட் வரும்படி பரப்பி விடவும். சிறிய மற்றும் பெரிய ஸ்பூன்களை கழுவி சுத்தம் செய்து துடைத்து, இதன் பின்பக்கத்தை சாக்லேட் கலவையில் தொட்டு எடுக்கவும்.

  9. 9

    இவ்வாறு அனைத்து ஸ்பூன்களையும் தயார் செய்து பட்டர் பேப்பர் மீது வைக்கவும். இதை 15 நிமிடங்கள் ப்ரீசரில் வைக்கவும். மீண்டும் இரண்டாவது கோட் செய்து மேலும் 15 நிமிடங்கள் ப்ரீசரில் வைக்கவும்.

  10. 10

    அதன்பின் எடுத்து இரண்டு நிமிடங்கள் கழித்து சாக்லேட் ஐ ஸ்பூனிலிருந்து பொறுமையாக எடுக்கவும். ஒரு சிறிய மூடியின் நடுவில் கொஞ்சம் சாக்லேட் சேர்த்து இதன் மேல் தயாரித்துள்ள பெரிய சைஸ் சாக்லேட் இதழ்களை உருகிய சாக்லேட்டில் தொட்டு பூ போல அடுக்கவும். நடுவில் சிறிய ஸ்பூன் இதழ்களை அடுக்கவும்.

  11. 11

    கடைசியாக மகரந்தத்திற்காக நடுவில் கொஞ்சம் சாக்லெட் சேர்த்து அதன் மேல் சில்வர் பால்ஸ் தூவவும். தயார் செய்த பூவை ஃப்ரிட்ஜில் வைக்கவும். சிறிய இதய மோல்டில் உருகிய சாக்லேட்டை பிரஷ்ஷில் தொட்டு பரப்பி விடவும். இதனை 15 நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து பின் அன்மோல்ட் செய்யவும்.

  12. 12

    கேக்கின் பக்கவாட்டில் 50 கிராம் வைட் சாக்லேட்டை துருவி கைகளால் எடுத்து போட்டி அலங்கரித்துக் கொள்ளவும்.
    இப்போது கேக்கின் மேல் தயாரித்துள்ள சாக்லேட் பூவை வைக்கவும். தயாரித்துள்ள இதய சாக்லேட்டுகளை பக்கவாட்டில் அலங்கரித்துக் கொள்ளவும். இதன்மேல் பிரஷ்ஷால் ஜிகினாவை தொட்டு வைக்கவும். ஸ்டார் அச்சை பைப்பிங் பேகில் பொருத்தி கிரீமை சேர்த்து அலங்கரித்துக் கொள்ளவும்.

  13. 13

    தயார் செய்த கேக்கை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும். மிகவும் ருசியான வைட் பாரஸ்ட் கேக் எல்லாவிதமான விழாக்களுக்கும் பொருத்தமானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes