* வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#made4
வாழைக்காயில் மோர் கூட்டு செய்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் து.பருப்பை வேக வைப்பதற்கு பதில், ஊற வைத்து அரைத்து மோரில் கலந்து செய்வது.மேலும் தே.எண்ணெய் ஊற்றி செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
8 பேர்
  1. 2 கப்புளிக்காத திக்கான மோர்
  2. 1 வாழைக்காய் (பெரியது)
  3. 3 டேபிள் ஸ்பூன்து.பருப்பு
  4. 1 ஸ்பூன்தனியா
  5. 1 டீ ஸ்பூன்சீரகம்
  6. 1 ஸ்பூன்பச்சரிசி
  7. 1 டேபிள் ஸ்பூன்தேங்காய் துண்டுகள்
  8. 1 துண்டுஇஞ்சி
  9. 3ப.மிளகாய்
  10. தாளிக்க:-
  11. 1 டீ ஸ்பூன்கடுகு
  12. 1 டீ ஸ்பூன்து.பருப்பு
  13. 2சி.மிளகாய்
  14. 1 டேபிள் ஸ்பூன்தே.எண்ணெய்
  15. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  16. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  17. ருசிக்குகல் உப்பு
  18. தேவையான அளவுதண்ணீர்
  19. 1 டீ ஸ்பூன்ம.தூள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    வாழைக்காயை தண்ணீரில், ம.தூள், உப்பு,போட்டு சற்று பெரியதாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில், தனியா, து பருப்பு, பச்சரிசி, தேங்காய், சீரகம், ப.மிளகாய், இஞ்சி, ஆகியவற்றை, சூடான தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் மிக்ஸியில் போடவும்

  3. 3

    பின் மைய அரைக்கவும்.அரைத்ததை திக்கான மோரில் சிறிது கல் உப்பு போட்டு கலக்கவும்.சிறிய கடாயில் தண்ணீரில் போட்டு நறுக்கின வாழைக்காயை அடுப்பை சிறியதில் வைத்து வேக விடவும்.

  4. 4

    வாழைக்காய், குழையாமல் வெந்ததும், கலந்த மோரில், ம.தூள், சிறிது உப்பு போட்டு, அடுப்பை சிறியதாக வைத்து, மோரை ஊற்றவும்.

  5. 5

    நன்கு கொதித்து பொங்கி வந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.கடாயில்,1/2 டேபிள் ஸ்பூன் தே.எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு,து.பருப்பு, சி.மிளகாய், பெருங்காயத் தூள் போட்டு தாளித்து, மோர் கூட்டில் கொட்டவும்.

  6. 6

    மேலே கறிவேப்பிலை போட்டு, அடுப்பை நிறுத்தி விடவும்.பிறகு மேலே 1/2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத தே.எண்ணெய் விட்டு கிளறி, ஒரு பௌலில் மாற்றவும்.

  7. 7

    இப்போது மிகவும் சுவையான, சுலபமான, வித்தியாசமான,* வாழைக்காய் மோர் கூட்டு* தயார்.இது சுடு சாதத்தில், நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால், அட்டகாசமாக இருக்கும்.செய்து பார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes