தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 2கப் சாதம்
  2. 3கேரட்
  3. 2பச்சை மிளகாய்
  4. 1காய்ந்த மிளகாய்
  5. 1ஸ்பூன் கடலைப் பருப்பு
  6. 1ஸ்பூன் முந்திரி பருப்பு
  7. 1/2ஸ்பூன் கடுகு
  8. 1கொத்து கறிவேப்பிலை
  9. 1/2கைப்பிடி கொத்தமல்லி தழை
  10. 1வெங்காயம்
  11. 1ஸ்பூன் எலுமிச்சை சாறு
  12. 1/2ஸ்பூன் பெருங்காயம் தூள்
  13. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. 3டீஸ்பூன் எண்ணெய்
  15. 1ஸ்பூன் உப்புத் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கவும்.

  2. 2

    கேரட்டை துருவிக் கொள்ளவும்.

  3. 3

    பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும் கடுகு, கடலைப் பருப்பு, முந்திரி பருப்பு போட்டு தாளிக்கவும்.

  5. 5

    பருப்புகள் பொன்னிறமாக வறுபட்டதும் வெங்காயத்தை நிறம் மாறும் வரை வதக்கவும்.

  6. 6

    பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கேரட்டை சேர்க்கவும்.

  7. 7

    மஞ்சள் தூள், பெருங்காயம் தூள், உப்பு தூள், கறிவேப்பிலை சேர்த்து சிறிய தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும்.

  8. 8

    கேரட் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது நேரம் ஆற வைத்து வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  9. 9

    கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes