பிடி கொழுக்கட்டை  உப்புமா கொழுக்கட்டை

Usha Ravi
Usha Ravi @cook_17220825
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. -பச்சரிசி ஒரு கப்
  2. 2 டேபிள் ஸ்பூன்.துவரம்பருப்பு
  3. 3சிவப்பு மிளகாய்
  4. .துருவிய தேங்காய் அரை கப்
  5. .எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்
  6. .பெருங்காயம் ஒரு சிட்டிகை
  7. .உப்பு தேவையான அளவு
  8. கறிவேப்பிலை சிறிதளவு
  9. 2 கப்.தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    செய்முறை 1.
    பச்சரிசியையும் துவரம்பருப்பையும் மூன்று ஸ்பூன் தண்ணீர் விட்டு பிசிறி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி பருப்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு ரவை பதத்தில் உடைத்து க் கொள்ளவும்.
    அல்லது

  2. 2

    செய்முறை 2. அரிசி பருப்பு இரண்டையும் மாவு மிஷினில் கொடுத்து ரவை பதத்தில் உடைத்து வைத்துக் கொள்ளலாம்.

  3. 3

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாயை கிள்ளி போடவும். கறிவேப்பிலை,பெருங்காயம் சேர்க்கவும்.

  4. 4

    இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். தேங்காய் துருவல் சேர்க்கவும். உப்பை சேர்க்கவும்.

  5. 5

    அடுத்து உடைத்த அரிசி ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கெட்டியாக வரும் வரை கிளறவும். உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும்.

  6. 6

    அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.

  7. 7

    ஆறியவுடன் படத்தில் உள்ளபடி உருட்டி இட்லி தட்டில் வைத்து இட்லி குக்கரில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்து வைக்கவும். கொழுக்கட்டை ரெடி. சட்னி சாம்பாருடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Usha Ravi
Usha Ravi @cook_17220825
அன்று

Similar Recipes