மாம்பழக் கேசரி

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1முழு மாம்பழம்
  2. 2 ஸ்பூண்நெய்
  3. 1/4 கப்முந்திரிப்பருப்பு
  4. சிறிதளவுகிஸ்மிஸ்
  5. 1 கப்ரவை
  6. 1/2 கப் (தேவைக்கேற்ப)சீனி
  7. 1 டீ ஸ்பூண்ஏலக்காய் தூள்
  8. 2 கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாம்பழத்தில் உள்ள தோலை நீக்கி விட்டு குழைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் ஒரு ஸ்பூண் நெய் விட்டு முந்திரி,கிஸ்மிஸைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

  3. 3

    அதே நெய்யில் ரவையை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

  4. 4

    ரவை பொன்னிறமாக மாறும் போதே அடுப்பை அணைத்து விடவும்.

  5. 5

    கடாயில் மீண்டும் ஒரு ஸ்பூண் நெய் விட்டு பின் தண்ணீர் ஊற்றி அதோடு ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

  6. 6

    தண்ணீர் நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள ரவையைக் கொட்டி கிளறவும்.

  7. 7

    ரவை வெந்ததும் சீனி சேர்த்துக் கிளறவும்.

  8. 8

    இறக்குவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன் குழைத்த மாம்பழத்தைக் கொட்டி கிளறி இறக்கி விடவும்.

  9. 9

    சுவையான கமகம மாம்பழ கேசரி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes